சமூக வலைத்தளங்களில் தன்னை பற்றி பரப்பப்படும் அவதூறு பிரசாரங்களுக்கு எதிராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் (S. Shritharan) காவல்நிலையத்தில் முறைப்பாடொன்றை செய்துள்ளார்.
சிறீதரன் மதுபான சாலை உரிமங்களை பெற்றுக்கொண்டதாக முகநூல் மற்றும் டிக்டொக் போன்ற சமூகவலைத்தளங்களில் அவதூறான செய்திகள் வலம் வந்தன.
இவ்வாறான அவதூறுகள் தொடர்ச்சியாக பரப்பப்பட்டு வந்த நிலையில், அவதூறு பரப்பிய நபர்களுக்கு எதிராக கிளிநொச்சி காவல்துறையிலும், ஒட்டுசுட்டான் ‘சைபர் க்ரைம்’ பிரிவிலும், கொழும்பு ‘சைபர் க்ரைம்’ தலைமையகத்திலும் 24.09.2024 அன்று முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
முதற்கட்ட விசாரணை
சிறீதரன் காவல்துறையினர் ஆரம்பித்த முதற்கட்ட விசாரணையில் ஒருவர் தாம் பதிவிட்ட செய்தி பொய்யானது என்பதை ஏற்றுக்கொண்டுள்ளார்.
மற்றுமொரு நபர் அதிக மதுபான பாவனையால் தனக்கு மனநிலை குழம்பிவிட்டதாகவும் தற்போது மருத்துவ கண்காணிப்பில் இருப்பதாகவும் கூறி சிறீதரனிடம் தொலைபேசி ஊடாக மன்னிப்பு கேட்டுள்ளார்.
ஆனால், சட்ட நடவடிக்கை தொடர்பாக சிறீதரன் இறுக்கமான நிலைப்பாட்டில் இருப்பதால் இந்த விடயத்தை மறுப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.