இலங்கையில் தனது வெல்த் ரூ ரீடெய்ல் பேங்கிங் (WRL) வணிகத்தை விற்பனை
செய்வது குறித்து ஆராய்ந்து வருவதாக ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட் வங்கி, தனது
வாடிக்கையாளர்களுக்கு அறிவித்துள்ளது.
இந்த நடவடிக்கை ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட் குழுமத்தின் வலுவான வாடிக்கையாளர்
முன்மொழிவைக் கொண்ட சந்தைகளில் கவனம் செலுத்துவதற்கான, சர்வதேச உத்தியின் ஒரு
பகுதியாகும் என்று வங்கி கூறியுள்ளது.
வாடிக்கையாளர்களுக்கு உறுதி
சுமார் 15-18 மாதங்கள் எடுக்கும் என எதிர்பார்க்கப்படும் இந்த மாற்ற
செயல்முறை, அன்றாட வங்கி நடவடிக்கைகளை பாதிக்காது என்றும், அனைத்து
வைப்புத்தொகைகளும் நிதிகளும் பாதுகாப்பாக இருக்கும் என்றும் குறித்த வங்கி
வாடிக்கையாளர்களுக்கு உறுதியளித்துள்ளது.

மாற்றத்தின் போது நாங்கள் வழக்கம்போல உங்களுக்கு சேவை செய்வோம் என்று
வங்கியின் செய்தி கூறுகிறது, விற்பனை ஒழுங்குமுறை ஒப்புதல்களுக்கு உட்பட்டது
என்றும் அது கூறியுள்ளது.
மாற்றத்தை குறைந்தபட்ச இடையூறுடன் நிர்வகிக்க உறுதிபூண்டுள்ளதாகவும், மேலும்
முன்னேற்றங்கள் குறித்து வாடிக்கையாளர்களுக்கு அறியத்தருவதாகவும் ஸ்டாண்டர்ட்
சார்ட்டர்ட் தெரிவித்துள்ளது.

