முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

மாற்றுத் திறனாளிகளுக்கான நாடாளுமன்றக் குழுவின் தலைவராக சுகத் வசந்த தேர்வு

மாற்றுத் திறனாளிகளுக்கான நாடாளுமன்றக் குழுவின் தலைவராக தேசிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் சுகத் வசந்த டி சில்வா (Sugath Wasantha de Silva) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன தலைமையில் நடைபெற்ற நாாளுமன்றக் குழுவின் தொடக்கக் கூட்டத்தின் போது, அவரது பெயர் தேர்ந்தெடுக்கப்பட்டது.

இதன்போது, நாடாளுமன்ற உறுப்பினர் சந்திம ஹெட்டியாராட்சி முன்மொழிந்த நிலையில் எதிர்க்கட்சியின் பிரதம கொறடா கயந்த கருணாதிலக்க அதை வழிமொழிந்தார்.

தேசியக் கொள்கை

எதிர்க்கட்சியின் பிரதம கொறடா கயந்த கருணாதிலக, சுசந்த குமார நவரத்ன, சட்டத்தரணி சுசந்த தொடவத்த மற்றும் பத்மநாதன் சத்தியலிங்கம் ஆகிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்தக் குழுவில் அங்கம் வகிக்கின்றனர்.

புதிதாக நியமிக்கப்பட்ட தலைவர் சுகத் வசந்த டி சில்வா, இது தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும் ​போது,

ஒரு நாடாளுமன்றம் என்ற வகையில், இந்த குழுவின் முக்கிய எதிர்பார்ப்பு, மாற்றுத்திறனாளிகள் மீதான பொதுவான இலங்கையர்களின் பார்வையை மிகவும் உணர்திறன் மற்றும் நேர்மறையான ஒன்றாக மாற்றுவதாகும்.

மாற்றுத் திறனாளிகளுக்கான நாடாளுமன்றக் குழுவின் தலைவராக சுகத் வசந்த தேர்வு | Sugath Wasantha Select Physical Disability Leader

மாற்றுத்திறனாளிகள் தொடர்பான 28 ஆண்டுகால பழமையான சட்டத்தை திருத்தி, எதிர்காலத் தேவைகளுக்கு ஏற்ப தற்போதைய தேசியக் கொள்கையை திருத்துவதே குழுவின் நோக்கமாகும்.

மாற்றுத் திறனாளிகளுக்கு பொது நிறுவனங்களுக்கான அணுகல் வசதிகளை வழங்க வேண்டும் என்ற நீதிமன்றத் தீர்ப்பு கடந்த 14 ஆண்டுகளாக திறம்பட செயல்படுத்தப்படவில்லை.

இந்தத் தீர்ப்பை முறையாக நடைமுறைப்படுத்துவதை உறுதி செய்ய குழு தலையிடும் என்றும் சுகத் வசந்த டி சில்வா மேலும் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.