பொலிஸார், பொய்க்கதைகளை அவிழ்த்துவிட்டு சட்டத்தை கையில் எடுத்து செயற்படுகின்றனர் என இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளாா்.
அவர், யாழ். வடமராட்சி ஊடக இல்லத்தில் இன்று (25) குறித்த ஊடகவியலாளர் சந்திப்பை
ஏற்பாடு செய்துள்ளார்.
இதன்போது கருத்து தெரிவித்த எம்.ஏ.சுமந்திரன்,
உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தாம் ஏற்கனவே
எடுத்துக் கொண்ட தீர்மானத்திற்கு அமைவாக தனித்துப் போட்டியுடுவதென்றும்
பின்னர் கூட்டாக ஆட்சியமைக்க முடியுமென்றும் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், பங்காளிக் கட்சிகளுடன் எமது தலைவர் பேச்சுக்களில் ஈடுபட்டுள்ளதாகவும்
எம்.ஏ.சுமந்திரன் கூறியுள்ளார்.
மேலும் கூறுகையில்,