சுவிட்சர்லாந்து(Switzerland) கட்டாய நாடுகடத்தலை மீண்டும் ஆரம்பித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த விடயத்தினை புலம்பெயர்தலுக்கான சுவிட்சர்லாந்து மாகாணச் செயலகம்(SEM) உறுதிப்படுத்தியுள்ளது.
அதன்படி, கடந்த வெள்ளிக்கிழமையன்று(11) ஆப்கானிஸ்தான் நாட்டவர்கள் இருவரை அவர்களுடைய நாட்டுக்குத் திருப்பி அனுப்பியதாக புலம்பெயர்தலுக்கான சுவிட்சர்லாந்து மாகாணச் செயலகம் தெரிவித்துள்ளது.
குற்றச்செயல்களில் ஈடுபட்ட இருவர்
அத்துடன், கடந்த 2019ஆம் ஆண்டுக்குப் பிறகு சுவிட்சர்லாந்து மீண்டும் கட்டாய நாடுகடத்தலை மேற்கொண்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
இதன்போது, நாடு கடத்தப்பட்ட இரண்டு பேரும், தங்கள் சொந்த நாட்டில் இறக்கிவிடப்பட்டதும், அவர்களின் செலவுக்கு தலா 500 சுவிஸ் ஃப்ராங்குகளைக்(Swiss Franc)அதிகாரிகள் வழங்கியுள்ளனர்.
குற்றச்செயல்களில் ஈடுபட்ட அவர்கள் இருவரையும் சுவிஸ் அதிகாரிகள், இஸ்தான்புல்லுக்கு அழைத்துச் சென்று ஆப்கானிஸ்தான் செல்லும் விமானத்தினூடாக அனுப்பிவிட்டு சுவிட்சர்லாந்துக்கு திரும்பியுள்ளனர்.