அநுரவின் வெற்றி, இனவாதத்தைக் கக்காத அவரது தாழ்மையான பேச்சுக்கள், வெற்றியின் பின் அவரது ஆரம்ப செயற்பாடுகள் போன்றனவற்றினால் வடக்கு கிழக்கு வாழ் தமிழ் இளைஞர்கள் பெருமளவில் கவரப்பட்டு வருவதை சமூகவலைத்தளங்களில் காணக்கூடியதாக இருக்கின்றது.
இதேபோன்ற இளைஞர் தலைமைகள் வடக்கு கிழக்கில் உருவாக வேண்டும் என்கின்றதான கருத்துக்களும் தமிழ் மக்கள் மத்தியில் பரவலாக எழுப்பப்பட்டு வருகின்றது.
சாதரண மக்கள் மத்தியிலும் ஜே.வி.பி. பற்றி இருந்து வந்த அச்சம் கொஞ்சம் கொஞ்சமாக நீங்க ஆரம்பித்து வருவதையும் அவர்களது பேச்சுக்களிலும், பதிவுகளிலும் காணக் கூடியதாக இருக்கின்றது.
உடனடியாக ஏதாவது செய்யாவிட்டால் தமது மவுசு குறைந்துவிடும் என்று பயந்து, சில தமிழ் தலைவர்கள் விழுந்தடித்து ஓடித்திரிவதாக தெரியவருகின்றது.
‘சுமோ’ அடித்துப்பித்துக்கொண்டு ரவூப் ஹக்கீமைச் சந்தித்து உதவி கோரியிருக்கின்றார்.
‘this guy is more gangerous..’ என்று கூறியிருக்கின்றார்.
வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் எல்லாரும் சேர்ந்து போட்டிபோடுவோமா என்றும் கெஞ்சியிருக்கின்றார்.
‘கிழக்கு முஸ்லிம்கள் அதனை பெரிதாக விரும்பமாட்டார்களே..’ என்று ஹக்கிம் கொஞ்சம் இழுத்தடிக்க, ‘புலிப் பயங்கரவாதிகள் செய்த முஸ்லிம் விரோத செயல்களுக்குத்தான் நான் பகிரங்மாகக மன்னிப்பு கோரிவிட்டேனே.. ‘ என்றெல்லாம் கூறியிருக்கின்றார்.
கிழக்கின் ‘தமிழ் தேசியநீக்க மல்லியும்’ அதற்கு ரெடி என்றும் சமிஞ்ஞை காண்பித்திருக்கின்றார்.
முஸ்லிம் காங்கிரசின் ‘மத்திய குழுவுடன்’ பேசிவிட்டு திரும்பி வருகிறேன் என்று கூறியிருக்கின்றார் ஹக்கிம்.
அது சரி தமிழரசுக் கட்சியிலும் ‘மத்திய குழு’ என்று ஒன்று இருக்கின்றதே, அந்த ‘மத்தியகுழுவுடன்’ பேசிவிட்டுத்தான் இதுபோன்ற இணைப்பு விவகாரங்கள் பற்றி ஹக்கிமுடன் பேசவேண்டும் என்ற யதார்த்தம் ‘சுமோ’வுக்கு தெரியாதா?
மாவை போன்ற ‘மூன்று வாக்குச் செலுத்திய’ தலைமை இருக்கும் வரைக்கும் தமிழரசுக் கட்சியில் யார் அவரைக் கேள்விகேட்பது?