ஐக்கிய தேசியக் கட்சியை முன்பிருந்த நிலைக்கு மீண்டும் வலுப்படுத்துவதே தனது இலக்காகும் என்று கட்சியின் புதிய பொதுச் செயலாளர் தலதா அதுகோரளை தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளமை குறித்து அவரிடம் வினவியபோதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், இனி வரும் காலங்களில் ஐ.தே.க.வை கட்டியெழுப்ப அர்ப்பணிப்புடன் செயலாற்றுவோம்.
பிரதான இலக்கு
அத்துடன், எதிர்வரும் தேர்தல்களில் கட்சிக்கான வாக்குவங்கியை அதிகரித்து, முன்னைய நிலைக்கு எமது கட்சியை மீளக் கட்டியெழுப்புவதே எனது பிரதான இலக்காகும் என்றும் தலதா அதுகோரளை தெரிவித்துள்ளார்.