இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றைய(17.01.2025) தினத்துக்கான நாணயமாற்று விகிதங்களின் படி அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 292.21 ரூபாவாகவும் விற்பனை விலை 300.69 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
ஸ்ரேலிங் பவுண்ட் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 355.89 ரூபாவாகவும், விற்பனைப் பெறுமதி 369.61 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
அத்துடன், யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 299.35 ரூபாவாகவும், விற்பனைப் பெறுமதி 311.64 ரூபாவாகவும் உள்ளது.
நாணயமாற்று விகிதங்கள்
மேலும், கனேடிய டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 201.51 ரூபாவாகவும் விற்பனை விலை 210.17 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
இதேவேளை, அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 179.54 ரூபாவாகவும் விற்பனை விலை 188.93 ரூபாவாகவும் உள்ளது.