முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

அதிகரிக்கும் முறுகல்: ட்ரம்பை எச்சரித்த ரஷ்யா – பேரழிவின் விளிம்பில் உலகம்!!

ஈரான் மீது தாக்குதல் நடத்த அமெரிக்கா ஆலோசனை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியான நிலையில், “பேரழிவுக்கு வெறும் சில மில்லிமீட்டர் தொலைவில்தான் உலகம் இருக்கிறது” என ரஷ்யா எச்சரித்துள்ளது.

ரஷ்ய வெளியுறவுத்துறை துணை அமைச்சர் செர்ஜி ரியாப்கோவ், வெளிநாட்டு செய்தி நிறுவனத்திற்கு அளித்த நேர்காணலில் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

அதன்போது, “அமெரிக்கா, இஸ்ரேலுக்கு நேரடி ராணுவ ஆதரவு வழங்குமானால், அது மத்திய கிழக்கு பகுதியில் நிலைமையை தீவிரமாக மாற்றும். தற்போது நிலவும் மோதல், அணுசக்தி பேரழிவை தூண்டும் அளவுக்கு உள்ளது. ரஷ்யா இஸ்ரேலும் ஈரானும் தொடர்ந்தும் தொடர்பில் உள்ளது.” என ரியாப்கோவ் தெரிவித்திருந்தார்.

ட்ரம்ப் – ஈரான் மோதல்

இந்த நிலையில், அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப், ஈரானை எச்சரித்து, “உங்கள் தலைவர் எங்கே இருக்கிறார் என்பது எங்களுக்குத் தெரியும். நாங்கள் அவரை கொல்லப்போவதில்லை.ஆனால் உடனடியாக போரை நிறுத்த வேண்டும். எந்த நிபந்தனையும் இன்றி சரணடைய வேண்டும்” என்று கூறியிருந்தார்.

அதிகரிக்கும் முறுகல்: ட்ரம்பை எச்சரித்த ரஷ்யா - பேரழிவின் விளிம்பில் உலகம்!! | The End Of The World Is Near Warns Russia

இதற்குப் பதிலாக, ஈரான் கடுமையான எதிர்வினையுடன், “எங்களை யாராலும் சரணடைய வைக்க முடியாது. அமெரிக்கா நேரடியாக இந்த போரில் ஈடுபட்டால், தீவிர விளைவுகள் ஏற்படும்” என்று எச்சரித்திருந்தது.

இவ்வாறானதொரு பின்னணியிலேயே ரஷ்யாவின் குறித்த எச்சரிக்கை வெளியாகியுள்ளது.

மூன்றாம் உலகப்போர் அபாயம்

தொடக்கத்திலிருந்தே ஈரானுக்கு ஆதரவாக இருந்த ரஷ்யா, தற்போது இராணுவத்தையும் தயாராக வைத்திருப்பதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

அதிகரிக்கும் முறுகல்: ட்ரம்பை எச்சரித்த ரஷ்யா - பேரழிவின் விளிம்பில் உலகம்!! | The End Of The World Is Near Warns Russia

குறிப்பாக, சிரியாவின் லதாகியா மாகாணத்தில் உள்ள க்மீமிம் விமானப்படைத் தளத்தில், ரஷ்யா தனது அதிநவீன போர் விமானங்களை நிறுவி உள்ளது.அதேபோல, டார்ட்டஸ் கடற்படை தளமும் ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் செயல்படுகிறது.

அமெரிக்கா இஸ்ரேலுக்கு நேரடியாக ஆதரவளிக்குமாயின், ரஷ்யா இந்த தளங்களை மூலமாக பதிலடி கொடுக்கும் சாத்தியமும் அதிகம்.இது மோதலை மூன்றாம் உலகப்போருக்கே இட்டுச் செல்லக்கூடிய அபாயத்தை உருவாக்குகிறது.

இஸ்ரேலுக்கான அமெரிக்க உதவு

மேலும், ரஷ்ய அதிபர் மாளிகை செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் “அமெரிக்கா நேரடியாக தலையிட்டால், ஒரு அபாயகரமான முடிச்சு உருவாகும். இஸ்ரேலின் தாக்குதல்கள் நியாயமற்றவை. அமெரிக்கா, ராணுவ ஆதரவிலிருந்து விலக வேண்டும்.”என வலியுறுத்தியிருந்தார்.

அதிகரிக்கும் முறுகல்: ட்ரம்பை எச்சரித்த ரஷ்யா - பேரழிவின் விளிம்பில் உலகம்!! | The End Of The World Is Near Warns Russia

இஸ்ரேலுக்கும் அமெரிக்காவுக்கும் உலகம் முழுவதும் கவனமும் எதிர்ப்பும் அதிகரித்து வரும் வேளையில், மிகச் சிறிய தவறும் பெரிய விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய சூழ்நிலை உருவாகியுள்ளது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.