ஒரு சில அரசியல்வாதிகள் மாவீரர் துயிலும் இல்லங்களை தாங்கள்தான் துப்புரவு செய்து கொண்டிருப்பதாகக் காண்பிப்பதற்காக அங்கு படங்களை பிடித்து வெளிக்காட்டுகின்றார்கள் என இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு குருமண்வெளியில் இடம்பெற்ற நிகழ்வொன்று ஞாயிற்றுக்கிழமை(24.11.2024) நடைபெற்றது.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
”இந்த மாதம் மாவீரர்களுக்கு உரிய அஞ்சலி செலுத்துகின்ற மாதமாகும். எங்களுடைய மக்கள் ஒன்றிணைந்து மாவீரர் துகிலும் இல்லங்களை துப்புரவு செய்து வருகின்றார்கள்.
மாவீரர் துயிலும் இல்லம்
இவற்றைவிட சிலர் மாவீரர் துயிலும் இல்லங்களையும், மாவீரர்களையும் வைத்து அரசியல் செய்து கொண்டிருக்கிறார்கள்.
ஒரு சில அரசியல்வாதிகள் மாவீரர் துயிலும் இல்லங்களை தாங்கள்தான் துப்புரவு செய்து கொண்டிருப்பதாகக் காண்பிப்பதற்காக அங்கு படங்களை பிடித்து வெளிக்காட்டுகின்றார்கள்
.
மாவீரர்களை அஞ்சலி செலுத்துவதற்கு மக்கள் தாங்களாகவே செய்வார்கள்.
மாவீரர்களுக்கு அஞ்சலி
இம்மாத 27ஆம் திகதி மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக மக்களோடு மக்களாக இருந்து நாங்களும் செயற்படுவோம்.
அந்த வீர மறவர்களுக்காக நாங்களும் மக்களோடு இருப்போம். மாறாக மாவீரர்களை வைத்து நாங்கள் அரசியல் செய்யப் போவது அல்ல.
பலர் மாவீரர் குடும்பங்களை கௌரவிப்புச் செய்கின்றோம் என பலரிடம் பணம் பெற்றுள்ளார்கள் இதில் மக்கள் இதில் அவதானமாக இருக்க வேண்டும்” என்றார்.