திருப்பாச்சி
தளபதி விஜய் – இயக்குநர் பேரரசு கூட்டணியில் உருவாகி மாபெரும் அளவில் வெற்றியடைந்த திரைப்படம் திருப்பாச்சி. இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து த்ரிஷா, கோட்டா ஸ்ரீனிவாச ராவ், பசுபதி, மல்லிகா ஆகியோர் நடித்திருந்தனர்.
ப்ளாக் பஸ்டர் ஹிட்டான இப்படத்தில் விஜய்யின் தங்கையாக நடித்து ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தவர்தான் நடிகை மல்லிகா. இவர் சேரன் இயக்கி நடித்த ஆட்டோகிராப் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார். பின் திருப்பாச்சி படத்தில் விஜய்க்கு தங்கையாக நடித்து பிரபலமானார்.


ஒரு படத்திற்காக நடிகை கயாடு லோஹர் செய்த விஷயம்.. வைரலாகும் வீடியோ
தொடர்ந்து தமிழ் மற்றும் மலையாளம் மொழிகளில் நடித்து வந்த மல்லிகா 2013ம் ஆண்டுக்கு பின் சினிமாவிலிருந்து விலகி கணவர் பிள்ளைகளுடன் செட்டிலாகிவிட்டார்.
மல்லிகாவின் லேட்டஸ்ட் புகைப்படம்
இந்த நிலையில், மல்லிகாவின் லேட்டஸ்ட் புகைப்படம் வெளியாகியுள்ளது. தனது கணவர் மற்றும் பிள்ளைகளுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை நடிகை மல்லிகா தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.
இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும், திருப்பாச்சி படத்தில் நடித்த நடிகையா இது! என ஆச்சரியத்துடன் கேட்டு வருகிறார்கள். ஏனென்றால் அந்த அளவிற்கு ஆள் அடையாளம் தெரியாமல் மாறியுள்ளார். இதோ நீங்களே பாருங்க.


