கொழும்பு கோட்டை தொடருந்து நிலையத்திலிருந்து பிற்பகல் 04.55 மணிக்கு பொல்கஹவெல நோக்கிச் சென்ற அலுவலக விரைவு தொடருந்து எண்டெரமுல்ல தொடருந்து நிலையத்தைக் கடந்தபோது, தொடருந்தின் எஞ்சின் தனியாக பிரிந்து சென்றுள்ளது.
இதன்காரணமாக எண்டெரமுல்ல தொடருந்து நிலையத்தில் உள்ள தொடருந்து கடவையில் பெட்டிகள் நின்றதால், பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதாக தெரியவந்துள்ளது.
அத்தோடு, குறித்த சம்வத்தினால் அலுவலகங்களிலிருந்து தங்கள் வீடுகளுக்கு திரும்பிய பயணிகள் கடும் சிரமத்தை எதிர்கொண்டதாக கூறியுள்ளனர்.
தொடருந்துகள் தாமதம்
மேலும், மூன்றாவது பாதையில் இயக்கப்படும் அனைத்து தொடருந்துகளும் தாமதமானதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், கழன்று சென்ற அலுவலக விரைவு தொடருந்தின் இயந்திரம் சில மீற்றர் தொலைவில் நின்றதாகவும், தற்போது அது பெட்டிகளில் இணைக்கப்பட்டுள்ளதாகவும் தொடருந்து திணைக்களத்தின் மூத்த அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.