பிரபாஸ்
தெலுங்கு சினிமாவில் முன்னணி கதாநாயகனாக வலம் வருபவர் பிரபாஸ். இவர் நடிப்பில் கடைசியாக ‘சலார்’ மற்றும் ‘கல்கி 2898 ஏடி’ படங்கள் வெளிவந்தது.
இதில், ‘கல்கி 2898 ஏடி’ படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வசூலில் சாதனை படைத்தது.
இந்த படத்தின் வெற்றிக்கு பிறகு பல படங்களில் நடிக்கும் வாய்ப்பு பிரபாஸுக்கு கிடைத்தது.


ரஜினியின் ஜெயிலர் 2 ரிலீஸ் அப்டேட் .. நெல்சன் போட்ட அதிரடி கண்டிஷன்
அதன்படி, ‘ஸ்பிரிட்’, ‘சலார் 2’ மற்றும் ‘ராஜா சாப்’ உள்ளிட்ட பெரிய படங்களை கைவசம் வைத்துள்ளார்.
இதில் ‘ஸ்பிரிட்’ படத்தை ‘அர்ஜுன் ரெட்டி’ மற்றும் ‘அனிமல்’ போன்ற படங்களை இயக்கிய சந்தீப் ரெட்டி வங்கா இயக்குகிறார்.
அதிரடி அப்டேட்
இந்நிலையில், ஸ்பிரிட் படம் குறித்து தற்போது ஒரு அதிரடியான அப்டேட் வெளியாகி உள்ளது. அதன்படி, இப்படத்தில் பிரபாஸ் ஜோடியாக நடிகை த்ரிஷா நடிக்க உள்ளாராம்.

ஸ்பிரிட் படத்தில் பிரபாஸ் வில்லன் மற்றும் ஹீரோ என இரட்டை வேடத்தில் நடிக்க உள்ளார். இதில், வில்லன் ரோலில் நடிக்கும் பிரபாஸுக்கு ஜோடியாக த்ரிஷா நடிக்க இருக்கிறார் என கூறப்படுகிறது. இதனால், வில்லி கதாபாத்திரத்தில் த்ரிஷா நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

