அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump), உக்ரைன் மீது நடந்த ரஷ்யாவின் போருக்கு உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலன்ஸ்கி (Volodymyr Zelenskyy) தான் காரணம் என்று மீண்டும் தெரிவித்துள்ளார்.
அத்தோடு, தனது சக்தியை விடவும் 20 மடங்கு சக்திவாய்ந்த ஒருவரிடம் போரைத் தொடங்குவது மூடத்தனம் என்றும் அவர் ஜெலன்ஸ்கியை விமர்சித்துள்ளார்.
மில்லியன் கணக்கான மக்கள் உயிரிழந்துள்ள இந்த போருக்கான காரணமாக அவர் மூன்று பேரை குறிப்பிட்டுள்ளார்.
காரணமான முக்கிய நபர்கள்
அதில் முதலாவதாக புடினையும் இரண்டாவதாக அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஜோ பைடனையும் மூன்றாவதாக ஜெலன்ஸ்கியையும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், குறித்த போரை நிறுத்துவதற்காக தான் முயற்சி செய்து வருவதாகவும், விரைவில் அது தொடர்பான நல்ல யோசனை வரலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.