முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

உடைந்த நட்பு – உஷ்ணமான வார்த்தைகள் : ட்ரம்ப் Vs மஸ்க் மோதல்

அமெரிக்க (United States) ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) மற்றும் எலான் மஸ்க் (Elon Musk) இடையேயான மோதல் தீவிரமடைந்துள்ளது. 

ரூ.4 லட்சம் கோடி வரவு செலவு திட்ட சட்ட மூலத்தில் தொடங்கிய மோதல், இப்போது குற்றப்பத்திரிகை கோரிக்கை வரை சென்றுள்ளது. 

ஏறக்குறைய ஒரு வருடம் மட்டுமே நீடித்த இந்த நட்பு ட்ரம்ப்பின் இரண்டாவது பதவிக்காலம் தொடங்கிய ஐந்து மாதங்களுக்குள் பகிரங்கமாக முறிந்துள்ளது.

வெள்ளை மாளிகை

வியாழக்கிழமை, காலமான பாலியல் குற்றவாளி ஜெஃப்ரி எப்ஸ்டீன் உடனான தொடர்புகளை ட்ரம்ப் மறைப்பதாக மஸ்க் பகிரங்கமாக குற்றம் சாட்டினார். 

உடைந்த நட்பு - உஷ்ணமான வார்த்தைகள் : ட்ரம்ப் Vs மஸ்க் மோதல் | Trump Vs Musk Reasons Billionaire President Clash

இதற்குப் பதிலடியாக, ஜனாதிபதி ட்ரம்ப், வெள்ளை மாளிகையில் ஜெர்மனியின் புதிய ஜனாதிபதியுடன் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, மஸ்கை “ஏமாற்றம்” என்று குறிப்பிட்டார். 

ஸ்பேஸ்எக்ஸ் மற்றும் ஸ்டார்லிங்கிற்கு வழங்கப்படும் பில்லியன் டொலர் மதிப்புள்ள அரசு ஒப்பந்தங்களை ரத்து செய்வதாகவும் மிரட்டினார்.

மஸ்க் உடனடியாக சமூக ஊடகங்களில் பதிலடி கொடுத்ததோடு, ட்ரம்பின் குற்றச்சாட்டுக்களை மறுத்து, சில கேலிச்சித்திரங்களையும் வெளியிட்டார். மேலும், ட்ரம்பை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கைக்கும் ‘ஆம்’ என்று பதிலளித்தார்.

மஸ்க் – ட்ரம்ப் மோதல்

இந்த மோதல் ட்ரம்ப்பின் ட்ரூத் சோஷியல் (Truth Social) மற்றும் மஸ்கின் எக்ஸ் (X) ஆகிய சமூக ஊடக தளங்களில் முழுமையாக வெளிப்பட்டது. 

மஸ்க், ட்ரம்ப்பின் புதிய கூட்டாட்சிச் செலவு மசோதாவை “பிக் பியூட்டிஃபுல் பில்” என்று கேலி செய்த சில மணிநேரங்களுக்குப் பிறகு, இந்த வார்த்தைப் போர் வெடித்தது.

உடைந்த நட்பு - உஷ்ணமான வார்த்தைகள் : ட்ரம்ப் Vs மஸ்க் மோதல் | Trump Vs Musk Reasons Billionaire President Clash

“எலான் குறித்து நான் மிகவும் ஏமாற்றமடைந்துள்ளேன்,” என்று ஓவல் அலுவலகத்தில் இருந்து ட்ரம்ப் கூறியுள்ளார். இந்த வார்த்தைப் போர் பல அடுத்தடுத்த மோதல்களுக்கு வழிவகுத்தது. மஸ்க் கூட்டாட்சி ஒப்பந்தங்களில் இருந்து அதிகப்படியான பலன்களைப் பெறுவதாக ட்ரம்ப் குற்றம் சாட்டினார். 

மேலும், அமெரிக்க அரசாங்கத்திற்கும் மஸ்கின் நிறுவனங்களுக்கும் இடையிலான அனைத்து வணிக உறவுகளையும் முடிவுக்குக் கொண்டு வருவதாக அச்சுறுத்தினார்.

அரசு மானியங்கள்

“எங்கள் வரவுசெலவு திட்டத்தில் பில்லியன் கணக்கான டாலர்களை மிச்சப்படுத்த எளிதான வழி, எலானின் அரசு மானியங்கள் மற்றும் ஒப்பந்தங்களை ரத்து செய்வதே ஆகும்,” என்று ட்ரம்ப் பதிவிட்டார்.

உடைந்த நட்பு - உஷ்ணமான வார்த்தைகள் : ட்ரம்ப் Vs மஸ்க் மோதல் | Trump Vs Musk Reasons Billionaire President Clash

சில மணிநேரங்களுக்குப் பிறகு, சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு (ISS) விண்வெளி வீரர்களை ஏற்றிச் செல்ல பயன்படுத்தப்படும் நாசாவுடன் ஒப்பந்தம் செய்யப்பட்ட விண்கலங்களை ஸ்பேஸ்எக்ஸ் படிப்படியாக நிறுத்தும் என்று மஸ்க் அறிவித்தார். 

இந்த வார்த்தைப் பரிமாற்றம் மிகவும் இருண்ட பக்கத்தை அடைந்தது. ஜெஃப்ரி எப்ஸ்டீன் தொடர்பான வெளியிடப்படாத பதிவுகளில் ட்ரம்ப் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளதாக மஸ்க் X தளத்தில் பதிவிட்டார். 

அதுவே இந்த ஆவணங்கள் பொது மக்களுக்கு வெளியிடப்படாத உண்மையான காரணம் என்று ஆதாரம் இல்லாமல் அவர் குறிப்பிட்டார்.

ட்ரம்ப் பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும் என்று அழைப்பு விடுக்கும் ஒரு பதிவையும் மஸ்க் பகிர்ந்து கொண்டார். நிர்வாகம் நாட்டை மந்தநிலைக்கு இட்டுச் செல்கிறது என்ற தனது கருத்தை அவர் மீண்டும் வலியுறுத்தினார்.

https://www.youtube.com/embed/8vg2D3Pi9Rk

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.