பொது நிறுவனங்கள் பற்றிய குழு அல்லது கோப் குழுவின் (COPE) தலைவராக நாடாளுளுமன்ற உறுப்பினர் வைத்தியர் நிஷாந்த சமரவீர (Nishantha Samaraweera) ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
பொது நிறுவனங்கள் பற்றிய குழு இன்று வியாழக்கிழமை (09.01.25) பிற்பகல் 2.00 மணிக்கு நாடாளுமன்றத்தில் கூடிய போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டது.
மேல் நீதிமன்ற நீதிபதிகள்
இதேவேளை, இரண்டு புதிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் இன்று (09) காலை ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) முன்னிலையில் பதவியேற்றனர்.
அதன்படி, சட்டத்தரணி கே. எம். எஸ். திசாநாயக்க மற்றும் சட்டத்தரணி ஆர். பி. ஹெட்டியாராச்சி ஆகியோர் ஜனாதிபதி முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொண்டனர்.
இந்த நிகழ்வில் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவும் கலந்து கொண்டார்.