முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

தேசப்பந்துக்கு உதவிய நபருக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

புதிய இணைப்பு

இடைநீக்கம் செய்யப்பட்ட  காவல்துறை மா அதிபர் தேசபந்து தென்னகோன் தலைமறைவாக இருக்க உதவியதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட நபரை பிணையில் விடுவிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

அதன்படி, கைது செய்யப்பட்ட நபரை 10 இலட்சம் ரூபாய் மதிப்புள்ள சரீரப் பிணையில் விடுவிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

சம்பவத்திற்கு உதவியதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட காவல்துறை கான்ஸ்டபிளும் மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

முதலாம் இணைப்பு

பணி இடைநீக்கம் செய்யப்பட்ட காவல்துறை மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு (Deshabandu Tennakoon) உதவிய குற்றச்சாட்டில் காவல்துறை கான்ஸ்டபிள் உள்ளிட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த விடயத்தை காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

விசேட பாதுகாப்பு பிரிவில் பணியாற்றிவரும் கான்ஸ்டபிள் மற்றும் தலவத்துகொட பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டதாக தெரியவருகிறது.

நீதிமன்றில் முன்னிலை

கடந்த பெப்ரவரி 17 முதல் மார்ச் மாதம் 19 வரையான காலப்பகுதியில் தேசபந்து தென்னகோன் நீதிமன்றில் முன்னிலையாகாமல் தலைமறைவாக இருப்பதற்காக குறித்த இருவரும் உதவியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தேசப்பந்துக்கு உதவிய நபருக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு | Two Police Constable Arrested For Help Deshabandhu

2023 ஆம் ஆண்டு வெலிகம பெலேன பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு அருகில் நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பாக தேசபந்துவை கைது செய்வதற்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது.

மேலும், தேசபந்து தென்னகோன் 20 நாட்கள் தலைமறைவாக இருந்த நிலையில் மார்ச் 19ஆம் திகதி நீதிமன்றத்தில் சரணடைந்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.