அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் விலை இன்று (03.06.2026) வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி வெளிட்டுள்ள நாளாந்த நாணய மாற்று விகித அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 328.00 ரூபாயாகவும், அதன் விற்பனை விலை 337.97 ரூபாயாகவும் பதிவாகியுள்ளது.
நேற்று (02) இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்ட நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 326.75 ரூபாயாகவும் டொலர் ஒன்றின் விற்பனை விலை 336.60 ரூபாயாக பதிவாகியிருந்தது.
நாணய மாற்று விகிதம்
இதேவேளை நாணய மாற்று விகிதத்தின் படி, ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 440.10 ஆகவும் விற்பனைப் பெறுமதி 455.80 ஆகவும் பதிவாகியுள்ளது.

யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 379.55 ரூபாயாக பதிவாகியுள்ளதுடன் அதன் விற்பனை பெறுமதி 394.00 ரூபாயாக பதிவாகியுள்ளது.
கனேடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 235.65 ஆகவும் விற்பனைப் பெறுமதி 245.03 ஆகவும் பதிவாகியுள்ளது.
அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 232.62 ஆகவும் விற்பனைப் பெறுமதி 244.61 ஆகவும் பதிவாகியுள்ளது.
சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 254.33 ஆகவும் விற்பனைப் பெறுமதி 265.54 ஆகவும் பதிவாகியுள்ளது.
Source: https://ibctamil.com/article/us-dollar-selling-rate-surpasses-rs-337-mark-1780469115

