அமெரிக்க (US) துணை ஜனாதிபதி ஜேம்ஸ் டேவிட் வென்சி (James David Vance) இந்திய பிரதமர் மோடியை (Narendra Modi) சந்திக்க உள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அதன்படி, அமெரிக்க துணை ஜனாதிபதி எதிர்வரும் 21ஆம் திகதி இந்தியா செல்லவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
4 நாட்கள் விஜயம் மேற்கொள்ளவுள்ள டேவிட் வென்சி தனது மனைவி உஷாவுடன் இந்தியாவுக்கு செல்லவுள்ளார்.
வர்த்தக பேச்சுவார்த்தை
இந்த பயணத்தின்போது அமெரிக்கா, இந்தியா இடையேயான வர்த்தகம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், உலக அளவில் அமெரிக்கா, சீனா இடையே வர்த்தகப்போர் தீவிரமடைந்து வரும் நிலையில் அமெரிக்க துணை ஜனாதிபதியின் இந்திய வருகை முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.