வாடிவாசல்
இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகவுள்ள திரைப்படம் வாடிவாசல். இப்படத்திற்கான அறிவிப்பு கடந்த சில ஆண்டுகளுக்கு முன் வெளிவந்த நிலையிலும், படப்பிடிப்பு துவங்க சற்று தாமதமாகிவிட்டது.
விடுதலை 1 மற்றும் 2 திரைப்படங்களை முடித்துவிட்டு வெற்றிமாறன் இப்படத்தை இயக்கவிருந்தார். இதனால் படப்பிடிப்பு தள்ளிப்போனது. ஆனால் சமீபத்தில் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு வாடிவாசல் விரைவில் துவங்கவுள்ளது என அறிவித்துஇருந்தார்.
110 கிலோ எடையை அசால்டாக தூக்கிய நடிகை சமந்தா.. வைரலாகும் வீடியோ
படப்பிடிப்பு அப்டேட்
இந்த நிலையில், வாடிவாசல் படத்தின் படப்பிடிப்பு எப்போது துவங்குகிறது என்பது குறித்து இயக்குநர் வெற்றிமாறனிடம் கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த இயக்குநர் வெற்றிமாறன் “மே அல்லது ஜூன் மாதம் துவங்கும். அதற்கான முன் தயாரிப்பு பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது” என கூறியுள்ளார்.
வெற்றிமாறன் – சூர்யா கூட்டணியில் உருவாகும் வாடிவாசல் திரைப்படத்தில் இயக்குநரும் நடிகருமான அமீர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் ஜி.வி. பிரகாஷ் குமார் இப்படத்திற்கு இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.