இலங்கையில் எதிர்வரும் காலங்களில் 225 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் (Members of Parliament) வாகனங்களை வழங்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த விடயத்தினை வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் (Vijitha Herath) தெரிவித்துள்ளார்.
நேற்றிரவு (20) ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய விசேட நேர்காணலில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இதனைச் சுட்டிக்காட்டினார்.
முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு
அத்துடன், இனிமேல் எந்தவொரு நாடாளுமன்ற உறுப்பினருக்கும் வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான சிறப்பு அனுமதி வழங்கப்படமாட்டாது என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு குறைக்கப்பட்டமை தொடர்பிலும் அமைச்சர் விஜித ஹேரத் இதன்போது கருத்து வெளியிட்டார்.
இதேவேளை வாகன இறக்குமதிக்கான தடை எதிர்வரும் பெப்ரவரி முதலாம் திகதி முதல் நீக்கப்படும் என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) கடந்த19 ஆம் திகதி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.