வெங்கட் பிரபு
தமிழ் சினிமாவில் சென்னை 28 படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் வெங்கட் பிரபு. கங்கை அமரனின் மகனான இவர் முதல் படத்திலேயே வெற்றி இயக்குனர் என முத்திரை பதித்தார்.
இதை தொடர்ந்து சரோஜா, கோவா ஆகிய படங்களை இயக்கினார். ஆனால், மங்காத்தா படம் தான் வெங்கட் பிரபுவின் திரை வாழ்க்கையில் மாபெரும் வெற்றி திரைப்படமாக அமைந்தது.
விஜய் சேதுபதி அடுத்த படம் குறித்த மாஸ் அப்டேட்.. இயக்குனர் யார் தெரியுமா
இந்த ஆண்டு தளபதி விஜய்யை வைத்து வெங்கட் பிரபு இயக்கிய கோட் படம் வெளிவந்து உலகளவில் வசூல் வேட்டையாடியது. இந்நிலையில், பேட்டி ஒன்றில் வெங்கட் அவர் இயக்கப்போகும் அடுத்த படம் குறித்து பகிர்ந்துள்ளார்.
அதிரடி அப்டேட்
அதில், ” சிவகார்த்திகேயன் நடிப்பில் ஒரு படத்தை இயக்க ஏஜிஎஸ் நிறுவனத்திடம் பேச்சுவார்த்தை நடத்தி இருந்தேன். ஆனால், அந்த நேரத்தில் விஜய் கால்சீட் கிடைத்ததால் GOAT படத்தை இயக்கினேன்.
அடுத்து சத்யஜோதி நிறுவனத்துடன் ஒரு படத்தை இயக்க உள்ளேன். அது குறித்த பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. என் அடுத்த படத்தின் ஹீரோ யார் என்பது குறித்த தகவல் விரைவில் வெளிவரும்” என தெரிவித்துள்ளார்.