முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

கோர விபத்தில் உயிரிழந்த முன்னாள் முதல்வர் – அதிர்ஷ்ட எண்ணே துரதிர்ஷ்டமாக மாறிய சோகம்

விமான விபத்தில் உயிரிழந்த முன்னாள் குஜராத் முதல்வரின் தனிப்பட்ட வாகனங்கள் அனைத்திலும் 1206 என்ற எண்ணே இருந்தது. அதை அவர் தனது அதிர்ஷ்ட எண்ணாக நம்பினார். ஆனால் விதியும் அதே எண்ணைத் தேர்ந்தெடுத்தது.

லண்டனில் உள்ள தனது மகனை காண அகமதாபாத்தில் இருந்து விமானத்தில் சென்ற குஜராத் (Gujarat) முன்னாள் முதலமைச்சர் விஜய் ரூபானி அகமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்தார். 

நேற்று பிற்பகல் குஜராத்தின் அகமதாபாத் விமான நிலையத்திற்கு அருகிலுள்ள மேகனி நகரில் ஏர் இந்தியா (Air India) விமானம் ஒன்று புறப்பட்ட சிறிது நேரத்திலேயே விபத்துக்குள்ளானது.

விமான விபத்து 

AI171 விமானமாக இயங்கும் போயிங் 78708 விமானம், இரண்டு விமானிகள் மற்றும் பத்து கேபின் பணியாளர்கள் உட்பட 242 பேரை ஏற்றிச் சென்றது.

கோர விபத்தில் உயிரிழந்த முன்னாள் முதல்வர் - அதிர்ஷ்ட எண்ணே துரதிர்ஷ்டமாக மாறிய சோகம் | Vijay Rupani Death Lucky Number Mma Ws Bl

இதில் விமானத்தில் சென்ற 241 பேர் உயிரிழந்தனர். மேலும், மருத்துவ கல்லூரியின் விடுதியின் மீது விமானம் விழுந்ததால் மருத்துவ மாணவர்கள் 10 பேரும் உயிரிழந்தனர்.

இந்த நிலையில், விஜய் ரூபானி மரணத்தில் எதிர்பாரா மற்றுமொரு சோகம் நிகழ்ந்திருக்கிறது. அது அவரின் இறப்புத் தேதி. விஜய் ரூபானி 1206 என்ற எண் தனது அதிர்ஷ்ட எண்ணாகப் பல காலமாக நம்பினார். 

இதனால் அவரின் அனைத்து வாகனங்களின் பதிவெண்களும் 1206 என்றே இருந்தன. ஸ்கூட்டர், கார் எனத் தனது தனிப்பட்ட வாகனம் எதுவாக இருந்தாலும் அவரின் பதிவெண் 1206 தான். 

அதிர்ஷ்ட எண்

அவர் வாங்கிய முதல் ஸ்கூட்டரில் இந்த இலக்கம் தான் உள்ளது. அதேபோல் காரிலும் இதே இலக்கம் தான்.

கோர விபத்தில் உயிரிழந்த முன்னாள் முதல்வர் - அதிர்ஷ்ட எண்ணே துரதிர்ஷ்டமாக மாறிய சோகம் | Vijay Rupani Death Lucky Number Mma Ws Bl

ஆனால் விதி விஜய் ரூபானியின் இந்த நம்பிக்கையில் விளையாடியிருக்கிறது. பல தசாப்தங்களாக அவர் நம்பிக் கொண்டிருந்த 1206 எண்ணைக் கொண்ட தேதியிலேயே விஜய் ரூபானியின் உயிர் பிரிந்தது. 

ஜூன் 12 அதாவது 12.06ம் திகதியில் அகமதாபாத் விமான விபத்தில் சிக்கி விஜய் ரூபானி மரணமடைந்தார்.

பல வருடங்களாக விஜய் ரூபானி நம்பிய அதே அதிர்ஷ்ட எண்ணை விதியும் தேர்ந்தெடுக்க 12.06 அவருடைய வாழ்க்கைப் பயணத்தின் கடைசித் திகதியாக அமைந்தது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.