விஜயகாந்த்
மறைந்த கேப்டன் விஜயகாந்த் முதல் மகன் அரசியலில் தீவிரம் காட்டி வருகிறார். அவரது இரண்டாவது மகன் சண்முக பாண்டியன் படங்களில் நடித்து வருகிறார்.
சமீபத்தில், சண்முக பாண்டியன் நடிப்பில் படைத்தலைவன் என்ற திரைப்படம் வெளியானது. ஆனால், இப்படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை.
விஜயகாந்த் மற்றும் வடிவேலு இடையே சில பிரச்சனைகள் இருந்ததாக தொடர்ந்து செய்திகள் உலா வந்த வண்ணம் இருக்கிறது.


பெற்ற மகளே மாமா என்று சொன்னார்.. ராபர்ட் மாஸ்டர் வாழ்க்கையில் நடந்த சோகம்
போட்டுடைத்த மகன்!
இந்நிலையில், விஜயகாந்தின் மகன்களில் ஒருவரான சண்முக பாண்டியன் வடிவேலு குறித்து பேசியுள்ளார். தற்போது, இந்த விஷயம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
அதில், ” எங்கள் சொந்த மாமாவை எப்படி பார்த்தோமோ அதேபோல் தான் வடிவேலு மாமாவை சின்ன வயதில் பார்த்தோம்.
ஆனால் அவர் எங்களை ஏமாற்றிவிட்டு போய்விட்டார். அந்த சின்ன வயதிலேயே துரோகத்தை பார்த்துவிட்டோம். அதனால் இப்போது யார் என்ன செய்தாலும் கவலை இல்லை” என்று தெரிவித்துள்ளார்.


