ரோஜா ரோஜா
ஏ.ஆர். ரஹ்மான் இசையில் உன்னி கிருஷ்ணன் குரலில் வெளிவந்த பாடல் ரோஜா ரோஜா. இந்த பாடல் 1999ம் ஆண்டு தமிழ் சினிமாவில் வெளிவந்த காதலர் தினம் படத்தில் இடம்பெற்றிருந்தது.

இன்று வரை இப்பாடலுக்கு ரசிகர்கள் மத்தியில் மவுசு குறைய வில்லை.
கடந்த சில நாட்களாக ஒரு இளைஞன் ரோஜா ரோஜா பாடலை கச்சேரி ஒன்றில் அசால்ட்டாக சூப்பராக பாடும் வீடியோ வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை பார்க்கும் பலரும், அட யாரா இந்த பையன் இப்படி பாடுறான் என கேட்டு அந்த வீடியோவை வைரலாக்கினார்கள்.
In the search of gold, I found a diamond 🖤
His voice is very accurate pic.twitter.com/InQlB7yswh
— கபிலன் (@_kabilans) September 6, 2025
சத்யன் மகாலிங்கம்
இந்த நிலையில், அவரை பற்றிய விவரம் வெளியாகியுள்ளது. அவருடைய பெயர் சத்யன் மகாலிங்கம். இவர் பிரபல பின்னணி பாடகர் ஆவார். துப்பாக்கி படத்தில் வந்த ’குட்டி புலி கூட்டம்’, கழுகு படத்தில் வந்த ’ஆம்பளைக்கும் பொம்பளைக்கும் அவசரம்’, மாற்றான் படத்தில் வந்த ‘தீயே தீயே’ போன்ற பல பாடல்களை பாடியுள்ளார்.


தனுஷ் படத்தில் நடிக்க மறுத்த ஜீ.வி.பிரகாஷ்! அவரே சொன்ன அதிர்ச்சி காரணம்
ஆனால், சில காரணங்களால் இவருக்கு வாய்ப்புகள் கிடைக்காமல் இருந்துள்ளது. ஆனாலும்கூட தொடர்ந்து இசையில் தனது திறமையை வளர்த்து கொண்டே இருந்த சத்யன் மகாலிங்கத்தின் பழைய வீடியோ இணையத்தில் வைரலான நிலையில், அந்த வீடியோவை நெட்டிசன்கள் படுவைரலாக்கினார்கள்.
சந்தோஷ் நாரயணன்
இதில் இசையமைப்பாளர் சந்தோஷ் நாரயணன் இந்த வீடியோவிற்கு ரியாக்ட் செய்துள்ளார். கண்டிபாக இவருக்கு விரைவில் பல படங்களில் பாட வாய்ப்பு கிடைக்கும் என்றும், இவர் தமிழ் சினிமாவில் இன்னொரு ரவுண்டு வருவார் என்றும் ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
❤️❤️❤️❤️ https://t.co/EqtAKxJlrh
— Santhosh Narayanan (@Music_Santhosh) September 8, 2025

