ஐக்கியத்திறகு எதிராக இருப்பவர்களை திருத்துவதற்கு தமிழ்மக்கள் இந்த தேர்தலினூடாக சந்தர்ப்பம் வழங்கவேண்டும் என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.
மேலும் தேர்தல்காலங்களில் இளைஞர்களை குறிவைத்து மதுபானங்களை வழங்கும் செயற்பாடுகளை சிலர் முன்னெடுத்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வவுனியா (Vavuniya) தமிழ் மத்திய மகா வித்தியாலத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்கெடுப்பு நிலையத்தில் தனது வாக்கினை இன்று (14.11.2024) அவர் பதிவு, அதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
தேர்தல் திணைக்களம்
மேலும் கருத்த தெரிவித்திருந்த அவர், எனவே எதிர்காலத்தில் தேர்தல் திணைக்களம் தேர்தல் சட்டதிட்டங்களை இறுக்கமாக கடைப்பிடிக்கவேண்டும்.
தமிழ்மக்கள் இந்த தேர்தலில் ஐக்கியப்பட்டிருக்கக் கூடிய ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டணியை பலப்படுத்துவதன் ஊடாகவே தமிழ்மக்களின் பிரச்சனைகள் தீர்க்கக்கூடியதாக இருக்கும்.
ஐக்கியத்திறகு எதிராக இருப்பவர்களை திருத்துவதற்கு தமிழ்மக்கள் இந்த தேர்தலினூடாக சந்தர்ப்பம் வழங்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.