நீதி மற்றும் சிறைச்சாலைகள், அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாச ராஜபக்ச (Wijeyadasa Rajapakshe), பொலிஸாருக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யவுள்ளதாக எச்சரித்துள்ளார்.
ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மைத்திரி (Maithripala Sirisena) தரப்பினால் இன்று (21.04 2024) கோட்டையில் நடத்தப்பட்ட மத்திய குழுக் கூட்டத்தில் கட்சியின் பதில் தலைவராக அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள்: பிரதிவாதிகளுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்குகள்
பொலிஸாருக்கு எதிரான வழக்கு
இதனையடுத்து கட்சியின் தலைமையகத்துக்கு அவர் செல்ல முயன்ற போதும், அங்கு பாதுகாப்பிற்காக அமர்த்தப்பட்டிருந்த பொலிஸார் விஜயதாச உள்ளிட்டவர்கள் கட்சித் தலைமையகத்துக்குள் நுழைய விடாது தடுத்து நிறுத்தியுள்ளனர்.
சுதந்திரக் கட்சித் தலைமையகத்தினுள் இருந்து முக்கியமான ஆவணங்கள் காணாமல் போயுள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகள் நடைபெறுவதன் காரணமாக விஜயதாச உள்ளிட்டவர்கள் கட்சித் தலைமையகத்தினுள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டதாக பொலிஸார் விளக்கம் அளித்துள்ளனர்.
எனினும் தன்னைத் தடுத்து நிறுத்திய பொலிஸாருக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தொடரவுள்ளதாகவும், நீதிமன்ற அனுமதியுடன் சுதந்திரக் கட்சித் தலைமையகத்தினுள் நுழைய எதிர்பார்த்துள்ளதாகவும் அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
குண்டுத் தாக்குதலின் எதிரொலி – இஸ்ரேலிடம் விளக்கம் கோரும் கனடா
குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கான நிவாரணம் தொடர்பில் அமைச்சரின் அறிவிப்பு
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |