முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

அக்டோபர் வரை வாட்டப்போகும் வெப்பநிலை; வடக்கில் நீர்த்தட்டுப்பாடு அபாயம்! எச்சரிக்கும் பேராசிரியர்

எல்நினோ இந்து சமுத்திரப் பிராந்தியத்தை நெருங்கி வருவதால் பொதுமக்கள் நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்தி, நீர் முகாமைத்துவத்தை முறையாகப் பின்பற்ற வேண்டும் என யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் புவியியல் துறை பேராசிரியரும் கலைப் பீடாதிபதியுமான நாகமுத்து பிரதீபராஜா எச்சரிக்கை விடுத்துள்ளார். 

பெண்கள் வாழ்வுரிமைச் சங்கத்தின் ஏற்பாட்டில் எல்நினோ (El Niño) காலநிலை மாற்றம் தொடர்பான விசேட விழிப்புணர்வுச் செயலமர்வு இன்று (24) காலை யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

செயலமர்வில் முதன்மை வளவாளராகக் கலந்துகொண்ட யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் புவியியல் துறை பேராசிரியரும் கலைப் பீடாதிபதியுமான நாகமுத்து பிரதீபராஜா, 

 மத்திய பசுபிக் பெருங்கடல் பகுதியில் உருவாகியுள்ள எல்நினோ தாக்கம் இந்து சமுத்திரப் பிராந்தியத்திற்குள் ஊடுருவி வருவதால், ஜூலை முதல் அக்டோபர் மாதம் வரை அதிக வெப்பநிலை நிலவும்.

கடல் வழியாக வெப்பம் பரவும் வேகம், நிலத்தின் வழியாக வெப்பம் பரவுவதை விட சுமார் 16 மடங்கு அதிகம் என்பதால், இந்து சமுத்திரத்தில் ஏற்படும் வெப்ப உயர்வு சுற்றியுள்ள பிராந்தியங்களுக்கும் வேகமாகப் பரவும் என்றும் அவர் விளக்கமளித்தார்.

இதன் காரணமாக இலங்கை மற்றும் மாலைதீவுகள் அதிகளவில் பாதிக்கப்படக்கூடும் என்றும், குறிப்பாக வட மாகாணத்தின் முல்லைத்தீவு, மன்னார் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் கடுமையான நீர்த்தட்டுப்பாடு உருவாகும் அபாயம் காணப்படுவதாகவும் தெரிவித்தார்.

மேலும், ஜூலை முதல் செப்டம்பர் வரை கடுமையான வறட்சி நிலவும் நிலையில், அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் பாரிய மழைவீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் இருப்பதாக அவர் குறிப்பிட்டார். அக்டோபர் மாதத்திற்குப் பின்னரே காற்றழுத்தத் தாழ்வு மண்டலங்கள் உருவாகும் வாய்ப்பு காணப்படுவதால், அதுவரை அதிக வெப்பம் மற்றும் வறட்சியான காலநிலை நீடிக்கும் என்றும் தெரிவித்தார்.

எனவே, எதிர்வரும் காலநிலை மாற்றத்தின் தாக்கங்களை சமாளிக்க பொதுமக்கள் நீரை வீணாக்காமல் பயன்படுத்துவதோடு, நீர்வளத்தை பாதுகாக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் என பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா கேட்டுக்கொண்டார்.

இந்த நிகழ்வில் பெண்கள் வாழ்வுரிமைச் சங்கத்தின் இணைப்பாளர் வாசுகி, அமைப்பின் பிரதிநிதிகள், வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட கிராமங்களின் பிரதிநிதிகள் மற்றும் சமூகச் செயற்பாட்டாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Source: https://samugammedia.com/hot-weather-will-continue-until-october-risk-of-water-scarcity-in-the-north-professor-warns-1784885984

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.