முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

அர்ச்சுனாவும் சந்திரசேகரனும் அடிக்க பாய்ந்து கொண்டனர் (வீடியோ)

கிளிநொச்சியில் நடைபெற்ற மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தின் போது, பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் எம்.பி. அர்ச்சுனா மற்றும் அங்கு கூடியிருந்த ஏனைய அரசியல் பிரதிநிதிகள், அதிகாரிகள் மத்தியில் கடும் வாக்குவாதமும் கைகலப்பு ஏற்படும் சூழலும் உருவானது.

தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் உள்ளிட்ட பல அரசியல் பிரதிநிதிகள் கலந்துகொண்டிருந்த இக்கூட்டத்தில், திடீரென. கூட்டத்தின் நோக்கம் மற்றும் விவாதங்களின் போது ஏற்பட்ட கருத்து மோதல்கள், குறித்த நிகழ்வை ஒரு பதற்றமான சூழலுக்கு இட்டுச் சென்றது. இக்காணொளியில் பதிவாகியுள்ள சர்ச்சைக்குரிய கைகலப்பு, தற்போது சமூக வலைத்தளங்களில் பெரிதும் பேசப்பட்டு வருகின்றன.

குறித்த அரசியல்வாதிகளுக்கு இடையிலான கருத்து வேறுபாடுகளே இந்த மோதல் சூழலுக்கு அடிப்படையாக அமைந்ததாக அறிய முடிகிறது. இவ்வாறான பதற்றமான சம்பவங்கள் கூட்டத்தின் போது இடம்பெற்றமை அங்கு கூடியிருந்தவர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

கூட்டத்துக்கு தலைமைத்தாங்கிக்கொண்டிருந்த அமைச்சர் சந்திரசேகரன், பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா அமர்ந்திருந்த ஆசனத்துக்கு அருகில்சென்று ஏதோ தெளிவுப்படுத்த முயன்றார். அதற்கு அர்ச்சுனா செவிமடுக்காமையால், அமைச்சர் சந்திரசேகரன்  வெளியே போவென கடுந்தொனியில் சந்தமிட்டு, மேசையில் இருந்த பொருளொன்றை கையிலெடுத்தார்.

அப்போது எழுந்த அர்ச்சுனா, என்னை யாரும் வெளியே போகசொல்ல முடியாது என தானும் தனது ஆசனத்தில் இருந்து எழுந்தார். எனினும், அங்கிருந்தவர்கள், அர்ச்சுனாவை பிடித்துக்கொண்டனர். அமைச்சர் தனது ஆசனத்துக்கே திரும்பிவிட்டார். 

Source: https://www.tamilmirror.lk/video/%E0%AE%85%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%87%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B/52-380032

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.