உளவு பார்த்ததாக அமெரிக்க குடிமகன் ஒருவருக்கு மொஸ்கோ நீதிமன்றம் மொத்தம் 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது.
யூஜின் ஸ்பெக்டர் என்ற சந்தேகநபர் ரஷ்யாவின் உயிரித் தொழில்நுட்ப இரகசியங்களை அமெரிக்காவிற்கு அனுப்பியுள்ளதாக பெடரல் பாதுகாப்பு சேவை (FSB) தெரிவித்துள்ளது.
சிறைத்தண்டனை
ரஷ்யாவில் பிறந்து பின்னர் அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்த ஸ்பெக்டருக்கு உளவு பார்த்ததற்காக 13 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக ரஷ்ய அரசு ஊடகங்கள் முன்னர் செய்தி வெளியிட்டிருந்தன.
எனினும், ஏற்கனவே குறித்த நபருக்கு இருந்த லஞ்ச ஊழல் தண்டனையுடன் சேர்க்கப்பட்டு, அதிகபட்ச தண்டனை 15 ஆண்டு சிறைத்தண்டனையாக மாற்றப்பட்டுள்ளது.
ரஷ்ய அதிவேக மரபணு
குறித்த நபர், ரஷ்ய மக்கள்தொகையின் அதிவேக மரபணுத் திரையிடல் அமைப்பை அமெரிக்காவில் உருவாக்குவதற்காக, மாநில இரகசியங்களை உள்ளடக்கிய உயிரி தொழில்நுட்பம் மற்றும் உயிரியல் மருத்துவ தலைப்புகளில் பல்வேறு தகவல்களை சேகரித்து வெளிநாட்டுத் தரப்புக்கு மாற்றியுள்ளதாக FSB மேலும் தெரிவித்துள்ளது.
முந்தைய வழக்கில் 2021 ஆம் ஆண்டு கைது செய்யப்படுவதற்கு முன்பு, ஸ்பெக்டர் புற்றுநோயைக் குணப்படுத்தும் மருந்துகளில் நிபுணத்துவம் பெற்ற நிறுவன குழுவொன்றின் தலைவராக பணியாற்றியுள்ளதாகவும் ரஷ்யா மேலும் குறிப்பிட்டுள்ளது.