யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதனுக்கு பிடியாணை பிறப்பிக்க கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று (24) நடவடிக்கை எடுத்துள்ளது.
கோட்டை பொலிஸ் அதிகாரிகளின் கடமைக்கு இடையூறு விளைவித்த சம்பவம் தொடர்பாக நீதவான் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கில் நாடாளுமன்ற உறுப்பினர் ஆஜராகத் தவறியதே இதற்குக் காரணம்.
இன்று இவ்வழக்கில் நாடாளுமன்ற உறுப்பினர் ஆஜராகவில்லை, மேலும் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது அவரது பிணைதாரர்களும் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை.
அதன்படி, கோட்டை நீதவான் நீதிமன்றம் நாடாளுமன்ற உறுப்பினருக்கு பிடியாணை பிறப்பிக்க நடவடிக்கை எடுத்துள்ளது.
இச் சம்பவம் தொடர்பில் கடந்த செப்டம்பர் மாதம் 29 ஆம் திகதி அர்ச்சுனா கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார்.
போக்குவரத்து விதிகளை மீறி தமது வாகனத்தை நிறுத்தியமை மற்றும் புறக்கோட்டை பொலிஸாரின் கடமைகளுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் செயற்பட்டமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் அவருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Source: https://samugammedia.com/arjuna-mp-got-the-pidiyai-fort-by-court-order-1784871380

