முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

இந்தியாவில் இருந்து கடத்தப்பட்டதா? மன்னாரில் பெருந்தொகை கடல் அட்டைகளுடன் 9 பேர் கைது

இந்தியாவில் இருந்து கடத்தி வரப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படும் 14 ஆயிரம் கடல் அட்டைகள் மன்னாரில் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

மன்னார் சவுத்பார் பகுதியில் இருந்து கடல் அட்டைகளைப் பிடிப்பதற்கு அனுமதி பெற்றுள்ள மூன்று படகுகளில் பெருந்தொகையான பதப்படுத்தப்பட்ட கடல் அட்டைகள் கொண்டுவரப்படுவதாக கிடைத்த தகவலையடுத்து, கடற்படையினர் மேற்கொண்ட சோதனையில் இவை கைப்பற்றப்பட்டுள்ளன.

கைப்பற்றப்பட்ட கடல் அட்டைகள் இந்தியாவில் இருந்து சட்டவிரோதமாக கடத்தி வரப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படும் நிலையில், அவற்றை கடத்துவதற்கு உதவியதாகக் கூறப்படும் 9 சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைப்பற்றப்பட்ட கடல் அட்டைகள் உள்ளிட்ட சான்றுப் பொருட்களுடன் சந்தேகநபர்கள் மன்னார் மாவட்ட கடற்றொழில் மற்றும் நீரியல்வளத் திணைக்கள உதவிப் பணிப்பாளரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பான முதல் அறிக்கையுடன் சந்தேகநபர்கள் இன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.

இதேவேளை, கைப்பற்றப்பட்ட கடல் அட்டைகளை எதிர்வரும் 31ஆம் திகதி ஏலத்தில் விடுவதற்காக கொழும்பில் இருந்து திணைக்கள அதிகாரிகள் மன்னாருக்கு வருகை தரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 9ஆம் திகதி 12 படகுகளில் இருந்து 60 ஆயிரம் கடல் அட்டைகள் கைப்பற்றப்பட்டிருந்த நிலையில், அவை 1 இலட்சத்து 18 ஆயிரம் ரூபாவுக்கு ஏலம் விடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Source: https://samugammedia.com/smuggled-from-india-9-people-arrested-in-mannar-with-a-large-number-of-sea-cards-1785304483

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்