முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

இலங்கையில் ஒரேநாளில் 4 உயிர்களை காவுகொண்ட கோர சம்பவங்கள்

நாட்டின் வேறுபட்ட பகுதிகளில் நேற்று செவ்வாய்க்கிழமை (08) இடம்பெற்ற வாகன விபத்துக்களில் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் மற்றும் இரு இளைஞர்கள் உட்பட நால்வர் உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கெப்பெட்டிபொல, கொஸ்லந்த, கொடவில மற்றும் மாத்தறை ஆகிய பொலிஸ் பிரிவுகளிலேயே இவ் விபத்துக்கள் பதிவாகியுள்ளன.

மாத்தறை – அக்குரஸ்ஸ வீதியின் தொடம்பகஹவத்த அதிவேக வீதிப் பிரவேச சந்திக்கு அருகில், பஸ்ஸை முந்திச் செல்ல முயன்ற மோட்டார் சைக்கிள் எதிரே வந்த மற்றொரு மோட்டார் சைக்கிளுடன் மோதியுள்ளது.

இதில் தூக்கி வீசப்பட்ட மோட்டார் சைக்கிள் சாரதி பஸ்ஸின் சக்கரங்களில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

மற்றைய சாரதி காயங்களுடன் மாத்தறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உயிரிழந்தவர் பிட்டபெத்தர பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய இளைஞராவார்.

இதேவேளை  கெப்பெட்டிபொல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நுவரெலியா – பதுளை வீதியின் அளகொலகால பகுதியில் நுவரெலியா நோக்கிப் பயணித்த முச்சக்கரவண்டியொன்று , அதே திசையில் வீதியோரம் நிறுத்தப்பட்டிருந்த லொரியின் பின்புறத்தில் மோதியுள்ளது.

இதில் படுகாயமடைந்து வெலிமடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நுவரெலியாவைச் சேர்ந்த 19 வயதுடைய இளைஞர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

அத்துடன் கொஸ்லந்த – வெல்லவாய வீதியின் உடுமுல்ல பகுதியில் பயணித்த மோட்டார் சைக்கிளொன்று, எதிரே வந்த டிப்பர் லொரியுடன் மோதி விபத்துக்குள்ளானது.

இதில் படுகாயமடைந்த ஹல்தும்முல்லையைச் சேர்ந்த 58 வயதுடைய கொஸ்லந்த பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் கொஸ்லந்த வைத்தியசாலையில்  அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார்.

மேலும் கொடவில பொலிஸ் பிரிவின் சுல்தானாகொட வீதியில் பயணித்த முச்சக்கரவண்டியொன்று சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில் படுகாயமடைந்த சுல்தானாகொட பகுதியைச் சேர்ந்த 68 வயதுடைய முச்சக்கரவண்டியொன்று சாரதி மாத்தறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார்.

இவ் விபத்துக்கள் தொடர்பில் அந்தந்த பொலிஸ் நிலையங்கள் மேலதிக விசாரணைகளில்  ஈடுபட்டு வருகின்றன.

Source: https://samugammedia.com/tragic-incidents-in-sri-lanka-that-claimed-4-lives-in-a-single-day-1788930070

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.