முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

கிளர்ச்சிகளால் நாட்டை சீரழித்தவர்களே அநுர தரப்பினர்: அலிசாஹிர் மௌலானா குற்றச்சாட்டு

தேசிய மக்கள் சக்தியை சேர்ந்தவர்கள் கடந்த காலங்களில் கிளர்ச்சிகளால் நாட்டை
சீரழித்தவர்களே தவிர, ஆக்கபூர்வமான எந்த நடவடிக்கைகளையும் அவர்கள் முன்னெடுப்பதில்லை என இராஜாங்க அமைச்சர் அலிசாஹிர் மௌலானா தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் (17.09.2024) இடம்பெற்ற ஊடகவியலாளர்
சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அவர் மேலும் கூறுகையில், 

“தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளரின் தேர்தல் பிரசாரங்களின் போது
அதிகமான மக்கள் அவர்களின் பிரசாரப் பேச்சை கேட்பதற்காக வருவதுண்டு. ஆனால்
அவர்களுக்கு வாக்களிப்பதில்லை.

பிரசார மேடைகள் 

அவர்களின் கவர்ச்சியான பேச்சை கேட்பதுண்டு கேட்டு
காதலிப்பதுண்டு. அவர்களது தேர்தல் பிரசார
மேடைகளில் தெரிவிக்கப்படும் கருத்துக்கள் கனவுலகில் தான் நடக்குமே தவிர நிஜ
உலகில் சாத்தியம் இல்லை.

கிளர்ச்சிகளால் நாட்டை சீரழித்தவர்களே அநுர தரப்பினர்: அலிசாஹிர் மௌலானா குற்றச்சாட்டு | Aly Saheer Moulana Speech Supporting Moulana

இதனால், அவர்களுக்கு வாக்கு வழங்குவது இல்லை. ஏனைய அரசியல் தலைவர்களை
எதிர்ப்பதோடு நாட்டை சீரழிப்பதற்காகவே அவர்களது செயற்பாடு உள்ளது.

கடந்த
காலங்களில் கிளர்ச்சிகளால் நாட்டை சீரழித்தவர்களே தவிர, ஆக்கபூர்வமான எந்த
நடவடிக்கைகளையும் இவர்கள் முன்னெடுப்பதில்லை. பங்களாதேஷில் இடம்பெற்றமை போன்று
இங்கும் பல அரச சொத்துக்கள் நாசமாக்கப்படவிருந்தன. அவர்களால் நாட்டுக்கு
அதிகளவிலான அழிவுகள்  ஏற்பட்டுள்ளன. 

சம்பள உயர்வு 

ஒருவேளை இந்த தேர்தலில் ரணில் விக்ரமசிங்க தோற்றுவிட்டால் அரசியலுக்காக அல்ல
நாட்டு மக்களுக்காக ஏனைய ஜனாதிபதி வேட்பாளர்கள் வென்றால் ஆறு மாத
காலத்திற்கு கூட இந்த நாட்டை கொண்டு செல்ல முடியாது.

கிளர்ச்சிகளால் நாட்டை சீரழித்தவர்களே அநுர தரப்பினர்: அலிசாஹிர் மௌலானா குற்றச்சாட்டு | Aly Saheer Moulana Speech Supporting Moulana

எனவே, ரணில் விக்ரமசிங்க
வென்றால் தான் ஊழியர்களுக்கான சம்பள உயர்வு விடயத்தில் அமைச்சரவை அங்கீகாரத்தைப்
பெற்று இந்த ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தில் அதனை வென்றெடுத்து அனைவருக்கும்
சம்பள உயர்வினை அடுத்த ஆண்டு தொடக்கத்தில் வழங்குவார்.

வழங்கிய வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்படும். ஆனால் ஏனைய ஜனாதிபதி
வேட்பாளர்கள் வென்றால் திட்டங்களும் நிறுத்தப்பட்டு இன்று பங்களாதேஷ் நாடு
உள்ளது போன்று மீண்டும் ரணில் விக்ரமசிங்கவை தேடி வர வேண்டிய நிலை ஏற்படும்” என குறிப்பிட்டுள்ளார். 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.