நாட்டில் தங்கத்தின் விலை மாறி மாறி உயர்ந்தும் சரிந்தும் காணப்பட்டு வருகின்றது.
இன்று தங்கத்தின் விலை 3,000 ரூபாவால் குறைந்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
நேற்று (30) 24 கரட் தங்கம் ஒரு பவுண் 382,000 ரூபாவாக விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று அதன் விலை 379,000 ரூபாவாக குறைந்துள்ளது.
அதற்கமைய இன்றைய தங்க நிலவரப்படி,
24 கரட் தங்கம் பவுண் ஒன்று 379,000 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது. 22 கரட் தங்கம் பவுண் ஒன்று 348,700 ரூபாவாகவும், விற்பனை செய்யப்படுகிறது.
இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 47,375 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 43,588 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.
சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை ஏற்ற இறக்கங்களுடன் காணப்படுகின்றதால் உள்நாட்டு சந்தையிலும் தங்கத்தின் விலைகளில் மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன.
தங்கத்தின் விலை நாளுக்கு நாள் மாற்றமடைந்து வரும் நிலையில் நகைப்பிரியர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

