பெண்கள் மற்றும் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சராக சீதா அரம்பேபொல (Seetha Arambepola) பதவிப் பிரமாணம் செய்துகொண்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
பெண்கள் மற்றும் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சராக நியமிக்கப்பட்ட விசேட வைத்தியர் சீதா அரம்பேபொல, இன்று (13) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ரணில் விக்ரமசிங்க முன்னிலையில் (Ranil Wickremsinghe) பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.
சீதா அரம்பேபொல, சுகாதார இராஜாங்க அமைச்சராக வகிக்கும் பதவிக்கு மேலதிகமாக, பெண்கள் மற்றும் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
பதவிப் பிரமாண நிகழ்வு
தொழில் ரீதியாக மருத்துவப் பயிற்சியாளரான வைத்தியர் சீதா அரம்பேபொல சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) தேசியப் பட்டியல் ஊடாக நாடாளுமன்றத்திற்கு சென்றிருந்தார்.
அத்துடன் 2019 டிசம்பர் முதல் மார்ச் 2020 வரை மேல் மாகாண ஆளுநராகவும் பணியாற்றியிருந்தார்.
இதேவேளை சீதா அரம்பேபொலவின் பதவிப் பிரமாண நிகழ்வில் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவும் (Saman Ekanayake) கலந்துகொண்டார்.