முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

ஒக்டோபரில் ஆயிரக்கணக்கான தாதியர்களுக்கு நியமனம்! – சம்பளமும் உயரும் – அமைச்சர் அறிவிப்பு

இந்த ஆண்டு ஒக்டோபர் மாதத்தில் 2,847 தாதியர்களுக்கு நியமனங்களை வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். 

நேற்று முற்பகல் அலரிமாளிகை வளாகத்தில் நடைபெற்ற கொழும்பு தாதியர் பயிற்சிப் பாடசாலையின் 2021 ஆம் ஆண்டு அணியைச் சேர்ந்த மாணவத் தாதியர்களுக்கு தொப்பி அணிவித்தல் மற்றும் சேவைக்கான அர்ப்பணிப்பை அடையாளப்படுத்தும் நிகழ்வில் கலந்துகொண்ட போதே, அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார். 

அத்துடன், 2028 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் 1,949 பேருக்கும், ஒகஸ்ட் மாதத்தில் 2,920 பேருக்கும் தாதியர் நியமனங்களை வழங்கத் திட்டமிட்டுள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார். 

2030 ஆம் ஆண்டளவில் தாதியர் சேவைக்காக 13,600 பேரை ஆட்சேர்ப்பு செய்யத் திட்டமிடப்பட்டுள்ளதோடு, அந்த இலக்கில் 50% ஐ இந்த ஆண்டு முடிவடைவதற்கு முன்னர் பூர்த்தி செய்ய எதிர்பார்ப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். 

தாதியர் சேவையில் இணையும் அனைவரதும் சம்பளத்தை அதிகரிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. 

மேலும், குறைந்தபட்ச வசதிகளுடன் இயங்கி வரும் தாதியர் பயிற்சிப் பாடசாலைகளை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார். 

தாதியர் பல்கலைக்கழகம் ஒன்றை நிறுவுவதற்காக உயர்கல்வி அமைச்சுடன் இணைந்து தற்பொழுது திட்டமிடப்பட்டு வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார். 

Source: https://samugammedia.com/appointment-for-thousands-of-graduates-in-october—salary-will-also-increase—ministers-announcement-1782446618

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்