குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் கணினி அமைப்பில் இன்று (11) காலை திடீரென ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாகக் கடவுச்சீட்டு வழங்கும் சேவைகள் தற்காலிகமாகத் தடைப்பட்டிருந்தன.
இதனால், சேவைகளைப் பெற்றுக்கொள்வதற்காகக் காலை வேளையில் வருகை தந்த பொதுமக்கள் கடும் அசௌகரியங்களுக்கு உள்ளானதோடு, நிலவிய தாமதம் குறித்துத் தமது கவலையையும் அதிருப்தியையும் வெளிப்படுத்தினர்.
எனினும், பாதிக்கப்பட்ட கணினி முறைமை உடனடியாகச் சீரமைக்கப்பட்டு தற்போது சேவைகள் மீண்டும் வழமைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளதாக அத்திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் மகேஷ் கருணாதாச தெரிவித்துள்ளார்.
தொழில்நுட்பக் கோளாறு சரிசெய்யப்பட்டதைத் தொடர்ந்து, ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த அவர், பொதுமக்கள் தற்போது தடங்கலின்றிச் சேவைகளைப் பெற்றுக்கொள்ள முடியும் என உறுதிப்படுத்தியுள்ளார்.
Source: https://samugammedia.com/passport-services-have-returned-to-normal-1786427666

