அம்பாறை – மருதமுனை பிரதான வீதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மருதமுனை பகுதியில் உள்ள பெட்ரோல் நிரப்பு நிலையத்திற்கு அருகில் இன்று (16) இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
கதிர்காமம் நோக்கிச் சென்று கொண்டிருந்த அரச பேருந்தொன்று மோட்டார் சைக்கிளுடன் மோதியதில், மோட்டார் சைக்கிளை செலுத்திச் சென்ற நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர் ஜெயராமன் ஜெகதீஸ்வரன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இவர் களுவாஞ்சிக்குடி பிரதேச செயலகத்தில் பணியாற்றி வந்ததுடன், கல்லடி இசை நடனக் கல்லூரி வீதியைச் சேர்ந்தவர் எனவும், திருமணத்தின் பின் தற்போது பாண்டியிருப்பு பகுதியில் வசித்து வந்தவர் எனவும் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பெரியநீலாவணை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்

