வாகன இறக்குமதி தொடர்பாக தேவையற்ற அச்சம் உருவாக்கப்படுவதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் இன்று(08) அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு, ஜூன் மாதத்திற்கான அதிகாரப்பூர்வ கையிருப்பு சொத்துக்கள் 3.3% குறைவதற்கு வாகன இறக்குமதி ஒரு காரணியா என ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கும் அமைச்சர் நளிந்த பதில் அளித்துள்ளார்.
1200 மில்லியன் டொலர் வரம்பு
அதிகாரப்பூர்வ கையிருப்பு சொத்துக்கள் குறைவதற்கு வாகன இறக்குமதி ஒரு காரணி அல்ல அதன்போது அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

வாகன இறக்குமதி 1200 மில்லியன் டொலரை மீறாமல் வரம்பிற்குள் இருக்குமென என எதிர்பார்க்கப்படுவதாகவும் அவை மிகுந்த எச்சரிக்கையுடன் மேற்கொள்ளப்படுவதாகவும் அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.

