அதிபர் தேர்தலை யாராலும் ஒத்திவைக்க முடியாது என முன்னாள் அமைச்சர் ஜீ. எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.
இன்று (14) காலை விகாரைகளுக்கு சென்று வழிபட்ட பின்னர் அங்கு நாட்டின் தற்போதைய அரசியல் நிலைமைகள் தொடர்பில் கலந்துரையாடினார்.
பின்னர் ஊடகவியலாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்த பீரிஸ்,
ஏன் பயப்படவேண்டும்
அதிபர் தேர்தலை ஒத்திவைப்பதற்கு எந்தவொரு நபருக்கும் இடமில்லை.
நாட்டின் பொருளாதாரம் வலுவாக கட்டியெழுப்பப்பட்டுள்ளதாகவும், நாட்டின் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வு காணப்பட்டுள்ளதாகவும் அதிபர் பிரகடனப்படுத்தினால், தேர்தலை நடத்துவதற்கு ஏன் பயப்படவேண்டும் எனவும் அவர் கேள்வியெழுப்பினார்.