முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

கிங் கங்கையில் ஆண் ஒருவரின் சடலம் – சந்தேகத்திற்கிடமான மரணம் எனத் தகவல்

காலி மாவட்டத்தின்  வக்வெல்ல பாலத்திற்கு அருகில் கிங் கங்கையில் ஆண் ஒருவரின் சடலம் மிதப்பதாக போத்தல பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

நேற்று (23) மாலை இந்த சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதுடன், உயிரிழந்த நபரின் அடையாளம் இதுவரை கண்டறியப்படவில்லை.

இது ஒரு சந்தேகத்திற்கிடமான மரணம் என்பது இதுவரை நடத்தப்பட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சடலம் தொடர்பான நீதவான் விசாரணைக்குப் பின்னர், பிரேத பரிசோதனைக்காக கராப்பிட்டிய வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படவுள்ளது.

போத்தல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

000000000

வடக்கில் முன்மாதிரியாக மாறிய சாரதி, நடத்துநர் – நேர்மைக்கு கௌரவிப்பு

பயணி ஒருவர் தவறிவிட்டுச் சென்ற பெறுமதியான நகை மற்றும் பணத்தை, நேர்மையுடன் உரியவரிடம் ஒப்படைத்த பேருந்துச் சாரதி மற்றும் நடத்துனர் ஆகியோருக்குப் வடமாகாண பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையினல் பாராட்டுக்களும் கெளரவிப்பும் வழங்கப்பட்டுள்ளது.

​ கொடிகாமத்தில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்ற பேருந்தில் பயணித்த நபர் ஒருவர், தனது பெறுமதியான நகை மற்றும் பணப்பையைத் தவறுதலாகப் பேருந்திலேயே விட்டுச் சென்றுள்ளார்.

இதனை அவதானித்த குறித்த பேருந்தின் சாரதி மற்றும் நடத்துனரான மகேந்திரன் கோகுலதீபன் மற்றும் L. ஜனார்த்தனன் ஆகியோர், அந்தப் பொருட்களைப் பாதுகாப்பாக மீட்டெடுத்து, சம்பந்தப்பட்ட நபரை அடையாளம் கண்டு, உடனடியாக அவரிடம் ஒப்படைத்தனர்.

​இவர்களின் இந்த உன்னதமான மனிதாபிமானச் செயற்பாட்டைக் கௌரவிக்கும் வகையில், வடமாகாண பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் ஏற்பாட்டில், அதன் தலைவர் பொறியளாலர் விமலேஸ்வரன் தலைமையில் கௌரவிப்பு நிகழ்வு அண்மையில் இடம்பெற்றது.

​வடமாகாண பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் அலுவலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில்,

நேர்மையாகச் செயற்பட்ட சாரதி மற்றும் நடத்துனருக்குப் பொன்னாடை போர்த்திக் கௌரவிக்கப்பட்டதோடு, அன்பளிப்பாக சிறிய பணப்பரிசும் வழங்கப்பட்டது.

Source: https://samugammedia.com/a-mans-body-found-in-the-king-canal—reported-as-a-suspicious-death-1782278088

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.