முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

கொழும்பில் கொட்டித்தீர்க்கும் மழை; நீரில் மூழ்கிய பல வீதிகள்! மண்சரிவு அபாய எச்சரிக்கை

கொழும்பு மற்றும் அதனை அண்மித்த பல பகுதிகளில் பெய்து வரும் கடும் மழை காரணமாக பல வீதிகள் நீரில் மூழ்கியுள்ளன.

இதனால் பொதுமக்கள் மற்றும் வாகன சாரதிகள் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

தொடர்ந்து பெய்து வரும் மழையால் சில பகுதிகளில் வீதிகளில் நீர் தேங்கியுள்ளதுடன், போக்குவரத்திலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், அவசியமற்ற பயணங்களைத் தவிர்த்து, பயணங்களின் போது மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

இதேவேளை  கொழும்பு, களுத்துறை மற்றும் கேகாலை ஆகிய மாவட்டங்களின் பல பகுதிகளுக்கு முதலாம் கட்ட மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

இன்று (15) காலை 10.00 மணிக்கு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தினால் (NBRO) வெளியிடப்பட்டுள்ள இந்த அறிவித்தல், நாளை (16) காலை 10.00 மணி வரையிலான 24 மணித்தியாலங்களுக்குச் செல்லுபடியாகும். 

இதற்கமைய, கொழும்பு மாவட்டத்தின் சீதாவக்க பிரதேச செயலகப் பிரிவு மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகள், 

களுத்துறை மாவட்டத்தின் தொடங்கொட, புளத்சிங்ஹல, பேருவளை, இங்கிரிய, மத்துகம, பாலிந்தநுவர மற்றும் வலல்லாவிட்ட ஆகிய பகுதிகள், 

கேகாலை மாவட்டத்தின் வரகாப்பொல மற்றும் ருவன்வெல்ல ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகள் மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளுக்கு இந்த அறிவித்தல் பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Source: https://samugammedia.com/heavy-rain-lashes-colombo-many-streets-submerged-in-water-landslide-danger-warning-1789455045

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்