முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

‘கொஸ் மல்லி’யின் உறவினர் சுட்டுக்கொலை – தப்பிச் சென்ற இருவர் சிக்கினர்

பெல்லன்வில பகுதியில் நேற்று (25) இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய இரு சந்தேகநபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

துப்பாக்கிச் சூட்டை நடத்தியவர் மற்றும் அவரை மோட்டார் சைக்கிளில் அழைத்துச் சென்றவர் ஆகிய இருவரே நவகமுவ பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் துப்பாக்கிச் சூட்டை நடத்தியவர் இராணுவத்திலிருந்து தப்பிச் சென்றவர் எனவும், மின்னேரியா இராணுவ முகாமிலிருந்து துப்பாக்கிகள் கடத்தப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் எனவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று இரவு சுமார் 7.45 மணியளவில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர், பெல்லன்வில நடைபாதை நுழைவாயிலுக்கு அருகிலுள்ள உணவகமொன்றின் முன்னால் நின்றிருந்த உணவக உரிமையாளரை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.

இந்தத் துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த 55 வயதுடைய நபர் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் ‘கொஸ் மல்லி’ எனப்படும் திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் நபரின் உறவினர் எனவும், அவருடைய எதிர்த்தரப்பினரால் இந்தத் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருக்கலாம் எனவும் பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

சம்பவத்தையடுத்து பொரலஸ்கமுவ பொலிஸார், கல்கிஸ்ஸ கோட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவு உள்ளிட்ட பல விசாரணைப் பிரிவுகள் இணைந்து விசாரணைகளை முன்னெடுத்திருந்தன.

இந்த விசாரணைகளின் அடிப்படையில், துப்பாக்கிச் சூட்டை நடத்தியவர் மற்றும் அவரை அழைத்துச் சென்ற மோட்டார் சைக்கிளைச் செலுத்தியவர் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்களிடம் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Source: https://samugammedia.com/relative-of-kos-malli-shot-dead—two-who-escaped-got-caught-1785044986

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.