முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

சித்தாண்டியிலிருந்து தொண்டமானாறு வரை பக்திப் பயணம் – 60-க்கும் மேற்பட்ட யாத்திரிகர்கள் வருகை

மட்டக்களப்பு மாவட்டம் சித்தாண்டி வேலோடு மலை முருகன் ஆலயத்திலிருந்து ஆன்மீகப் பயணத்தை மேற்கொண்ட 60-க்கும் மேற்பட்ட சைவ யாத்திரிகர்கள் இன்று (12) புதன்கிழமை காலை யாழ்ப்பாணம் – தொண்டமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலயத்தை வந்தடைந்துள்ளனர்.

சித்தாண்டி வேலோடு மலை முருகன் ஆலயத்தின் ஆதீனகர்த்தா சுப்பிரமணியம் தியாகராஜா தலைமையில் கடந்த 10ஆம் திகதி திங்கட்கிழமை காலை சித்தாண்டியிலிருந்து பேருந்து மூலம் இந்த ஆன்மீக யாத்திரை ஆரம்பமானது.

யாத்திரிகர்கள் அன்றைய தினம் மாலை யாழ்ப்பாணம் – காரைநகரிலுள்ள ஈழத்துச் சிதம்பரம் சிவன் ஆலயத்தை சென்றடைந்து வழிபாடுகளில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து, 11ஆம் திகதி அதிகாலை காரைநகர் சிவன் ஆலயத்திலிருந்து பாதயாத்திரையாக புறப்பட்டு, பொன்னாலை வழியாக கடற்கரைப் பாதையூடாக பயணித்த அவர்கள், வழியிலுள்ள பல்வேறு ஆலயங்களை தரிசித்த பின்னர் கீரிமலை நகுலேஸ்வரர் ஆலயத்தை சென்றடைந்தனர்.

அதன்பின்னர், இன்று அதிகாலை 4 மணியளவில் கீரிமலையிலிருந்து பாதயாத்திரையாக புறப்பட்டு மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயத்தை தரிசித்த யாத்திரிகர்கள், காலை தொண்டமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலயத்தை வந்தடைந்தனர்.

இன்று நள்ளிரவு இடம்பெறவுள்ள தொண்டமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலய கொடியேற்றத்தை தரிசித்த பின்னர், தங்களது ஆன்மீகப் பயணத்தை நிறைவு செய்து பேருந்து மூலம் கிழக்கு மாகாணத்துக்கு திரும்பவுள்ளனர்.

இந்த ஆன்மீகப் பயணம் தொடர்பில் சித்தாண்டி வேலோடு மலை முருகன் ஆலய ஸ்தாபகரும் ஆதீனகர்த்தாவுமான சுப்பிரமணியம் தியாகராஜா தெரிவிக்கையில், கிழக்கு மாகாணத்திலிருந்து வடக்கு மாகாணம் நோக்கிய இந்த ஆன்மீகப் பயணம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது எனக் குறிப்பிட்டார்.

தமது குழுவினர் வருடாந்தம் ஆறுக்கும் மேற்பட்ட சைவ யாத்திரைகளை மேற்கொண்டு வருவதாகவும், வயதானவர்கள் முதல் இளையவர்கள் வரை ஆண்கள், பெண்கள் என பலரும் ஆர்வத்துடன் இப்பயணங்களில் பங்கேற்பதாகவும் அவர் தெரிவித்தார்.

இவ்வாறான ஆன்மீகப் பயணங்கள் ஊடாக குறிப்பாக இளையோர் சைவ வாழ்வியல் மற்றும் பண்பாட்டை நேரடியாக அறிந்துகொள்ளும் வாய்ப்பு ஏற்படுவதுடன், மனதுக்கும் உடலுக்கும் புத்துணர்வை ஏற்படுத்துவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Source: https://samugammedia.com/pilgrimage-from-chittandiyam-to-thondamanaru—more-than-60-devotees-visited-1786526759

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.