செட்டிகுளம் மகாவித்தியாலயத்தின் 110ஆவது ஆண்டு நிறைவு விழா கொண்டாட்டம் இன்று சிறப்பாக இடம்பெற்றது.
வவுனியா செட்டிகுளம் மகாவித்தியாலயம் தனது 110ஆவது ஆண்டு நிறைவு விழாவை இன்றையதினம் பாடசாலை வளாகத்தில் வெகுவிமர்சையாக கொண்டாடியது.
பாடசாலையின் பழைய மாணவர் சங்கத்தின் ஏற்ப்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில் விசேடமாக 110ஆவது ஆண்டுநிறைவை நினைவுகூரும் வகையில், 110பானைகளில் பொங்கல் வைத்து சிறப்பு பொங்கல் நிகழ்வு நடைபெற்றது.
விருந்தினர்கள் மங்கள வாத்தியம் முழங்க அழைத்து வரப்பட்டதுடன் பாடசாலையில் புதிதாக அமைக்கப்பட்ட பிரதான நுளைவாயில் திறந்து வைக்கப்பட்டது. அதனை தொடர்ந்துஏனைய விழா நிகழ்ச்சிகள் ஆரம்பமானது.
110 ஆண்டுகால கல்விச் சேவையை நினைவுகூரும் இந்நிகழ்வு, பாடசாலையின் வரலாற்றுச் சிறப்பை வெளிப்படுத்தும் வகையில் பல்வேறு கலாசார மற்றும் நினைவேந்தல் நிகழ்வுகளுடன் சிறப்பாக நடைபெற்றது.
செட்டிகுளம் மகாவித்தியாலம் 1916ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. கடந்த 110ஆண்டுகளாக அந்தபகுதி மக்களின் கல்வி, பண்பாடு, ஒழுக்கம் மற்றும் சமூக முன்னேற்றத்திற்கு மிகப்பெரிய பங்களிப்பை இப்பாடசாலை வழங்கி வருவதுடன் பல ஆளுமைகளையும் உருவாக்கியுள்ளது.
குறித்த நிகழ்வில்பாடசாலையின் அதிபர், ஆசிரியர்கள், பழைய மாணவர்கள், கல்வியாளர்கள், மாணவர்கள், பெற்றோர்கள்,நலன்விரும்பிகள் மற்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த அழைப்பாளர்கள் எனப் பெருமளவானோர் கலந்துகொண்டு விழாவைச் சிறப்பித்தனர்.
Source: https://samugammedia.com/110th-anniversary-of-chettikulam-mahavidyalayam-1785757072

