முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

திருகோணமலையில் சைவநெறி முறைப்படி திருமண பந்தத்தில் இணைந்த செக் நாட்டு ஜோடி!

திருகோணமலை சாம்பல்தீவு பகுதியில் உள்ள பாம் பீச் ரிசோட் விடுதியில், செக் குடியரசைச் சேர்ந்த இருவர் சைவநெறி முறைப்படி திருமண பந்தத்தில் இணைந்துள்ளனர்.

யோகாசன குருவான சிவதிரு. கலியுகவரதனின் முன்னிலையில், மைக்கல் மற்றும்  சன்ரா ஆகியோர் திருமண பந்தத்தில் இணைந்துகொண்டனர்.

இதன்போது, ஒருவரை ஒருவர் இறுதி மூச்சு வரை இன்பத்திலும் துன்பத்திலும் அன்பு செய்து வாழ்வோம் என உறுதிமொழி எடுத்துக்கொண்டதுடன், பாரம்பரிய தாலிக்குப் பதிலாக குருவினால் வழங்கப்பட்ட உருத்திராக்க மணி மாலையை அணிவித்துக்கொண்டனர்.

மேலும், திருமண நிகழ்வின் போது மணமக்கள் இருவருக்கும் சிவதிரு. கலியுகவரதனால் சிவலிங்கம் வழங்கி வைக்கப்பட்டது.

சிவதிரு. கலியுகவரதன் தலைமையில் குறித்த விடுதியில் வெளிநாட்டவர்களுக்கு சைவநெறி முறைப்படி நடத்தி வைக்கப்படும் 10ஆவது திருமண நிகழ்வு இதுவாகும்.

குறித்த விடுதியின் உரிமையாளரான மறெக் நெமெக், செக் குடியரசைச் சேர்ந்தவர். யோகக்கலையை பயில்வதற்காக திருகோணமலையைச் சேர்ந்த யோகாசன குருவான சிவதிரு. கலியுகவரதனுடன் நட்பை ஏற்படுத்திக்கொண்ட அவர், சைவநெறி முறையிலான வாழ்வில் ஆர்வம் கொண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இதனையடுத்து, தனது நாட்டைச் சேர்ந்தவர்களும் சைவநெறி முறையில் திருமண பந்தத்தில் இணைய வேண்டும் என்ற நோக்கில், தனது விடுதியில் வைத்து சிவதிரு. கலியுகவரதன் ஊடாக இவ்வாறான திருமணங்களை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Source: https://samugammedia.com/a-czech-couple-tied-the-knot-in-trincomalee-following-the-shaivite-tradition-1785213128

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்