முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

மலையகத்தில் தமிழ்ப் பிரதிநிதித்துவம் கட்டாய தேவை: மருதபாண்டி ராமேஸ்வரன்

மலையக மக்களின் அரசியல் இருப்பென்பது மிக முக்கியம். எனவே, நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் வாழும் மக்கள் நன்கு சிந்தித்து வாக்களிக்க வேண்டும் என நுவரெலியா (Nuwara Eliya) மாவட்ட நாடாளுமன்ற தேர்தல் வேட்பாளருமான மருதபாண்டி ராமேஸ்வரன் (Marudapandi Rameswaran) தெரிவித்துள்ளார்.

தலவாக்கலை (Talawakelle) – மடக்கும்புர பிரதேசத்தில் இன்றையதினம் (17.10.2024) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கருத்து தெரிவித்த அவர், மலையக மக்களின் அரசியல் இருப்பை தீர்மானிக்கின்ற மிக முக்கிய மாவட்டமே நுவரெலியா மாவட்டமாகும்.

மலையகத்தின் இதயமெனக் கருதப்படுகின்ற இம்மாவட்டத்தில் எமக்கான தமிழ்ப் பிரதிநிதித்துவமென்பது கட்டாய தேவையாகும்.

ஒரு சமூகத்தின் தோல்வி

எனவே, மக்களுடன் இருக்கும் எம்மை மக்கள் நிச்சயம் ஆதரிப்பார்கள், ஆணை வழங்குவார்கள் என்ற உறுதியான நம்பிக்கை உள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியின் யானை சின்னத்தின் கீழ் நுவரெலியா மாவட்டத்தில் நாம் தனித்துவமாகக் களமிறங்கியுள்ளோம்.

தேசியப் பட்டியலில் எம்மவர்களுக்கே முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளது.

மாற்றம் வேண்டுமெனக் கூறி சிலர் வந்துள்ளனர். அவர்களை நம்பினால் கடைசியில் ஏமாற்றம்தான் ஏற்படும்.

அது தனி நபருக்கு ஏற்படும் தோல்வி அல்ல, ஒரு சமூகத்தின் தோல்வியாக மாறிவிடும்.

கடந்த பொதுத்தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் இருந்து ஐந்து தமிழர்கள் நாடாளுமன்றம் சென்றிருந்தோம்.

அதில் நானும், எமது பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமானும் (Jeevan Thondaman) ஆளுங்கட்சியில் இருந்தோம்.

கடந்த ஒரு வருட காலப்பகுதியில் பல அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

கல்வித்துறைக்கு நாம் அதிக முக்கியத்துவம் வழங்கியுள்ளோம். எமது சமூக முன்னேற்றத்துக்கு கல்வியே சிறந்த ஆயுதம். அதனால்தான் கல்விக்கு முன்னுரிமை வழங்கினோம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

 இது தொடர்பான முழுமையான விபரங்ளை கீழ்வரும் காணொளியில் காண்க 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.