சனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியின் பெண் வேட்பாளர்கள் யாழ்ப்பாண வணிகர்
கழகத்தினரைச் சந்தித்து கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளனர்.
குறித்த சந்திப்பானது இன்று (17.10.2024) இடம்பெற்றுள்ளது.
இதன்போது எதிர்வரும் தேர்தலி்ல் பெண் வேட்பாளரின் முக்கியத்துவம், பெண்களை
அரசியலில் ஈடுபடுவதன் நோக்கம் மற்றும் பெண்களின் ஏன் அரசியலில் ஈடுபட
வேண்டும் என்பது பற்றி கலந்துரையாடப்பட்டுள்ளன.
நாடாளுமன்ற தேர்தல்
மேற்படி விடயங்கள் குறித்து சனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியில் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வன்னி
மாவட்ட முன்னாள் போராளியான கருணாநிதி யசோதினி, யாழ்ப்பாண மாவட்ட பெண்
வேட்பாளர் சசிகலா ரவிராஜ் மற்றும் யாழ்ப்பாண வணிகர் கழகத்தின் தலைவர்
இ.ஜெயசேகரம் ஆகியோர் கலந்துரையாடியுள்ளனர்.
இந்த கலந்துரையாடலில் கட்சியின் ஆதரவாளர்கள், போராளிகள் நலம்புரிச் சங்க தலைவர் ஈஸ்வரன்
தமிழ் தேசிய செயற்பாட்டாளர் குழுமம் முன்னாள் போராளிகள் யாழ்ப்பாண வணிகர் கழக
உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.