முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டமை அநீதி!

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் ருக்‌ஷன் பெல்லன
பணி இடைநீக்கம் செய்யப்பட்டமை அநீதியான நடவடிக்கை என்று எதிர்க்கட்சித்
தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். 

நாடாளுமன்றத்தில் நேற்று கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். 

இது தொடர்பில் எதிர்க்கட்சி தலைவர் மேலும் தெரிவித்ததாவது, 

“புதிய அரசமைப்பு இயற்றப்படும்போது கருத்துச் சுதந்திரம் உள்ளிட்ட அடிப்படை
உரிமைகளை உறுதிப்படுத்துவதற்குரிய ஏற்பாடுகள் அவசியம்.

பணி நீக்கம்

ஏனெனில் மருந்து மாபியா உட்பட சுகாதார சேவையில் நிலவும் ஊழல், மோசடிகளை
அம்பலப்படுத்தும் வைத்தியர் ருக்‌ஷன் பெல்லன பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

ஊடகங்களுக்குத் தகவல்களை வழங்கினார் என்பதற்காகவே அவருக்கு எதிராக நடவடிக்கை
எடுக்கப்பட்டுள்ளது.

வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டமை அநீதி! | Suspension Of Deputy Director Hospital Injustice

இதனை ஏற்க முடியாது. அநீதியான நடவடிக்கையாகும்.

தரம் குறைவான மருந்து மற்றும் சுகாதாரத்துறையில் நடக்கும் ஊழல், மோசடிகள்
தொடர்பில் கருத்து வெளியிடும் சுதந்திரம் அவருக்கு இல்லையா?

தரம் குறைவான ஊசி பயன்பாட்டால் இருவர் உயிரிழந்துள்ளனர். அவர்களின் வாழும்
உரிமை பறிபோய் உள்ளது. இது தொடர்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன?” என்றார்
எதிர்க்கட்சித் தலைவர்.

இதற்குப் பதிலளித்த பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய,

“இரு மரணங்கள் தொடர்பில் கவலை அடைகின்றோம். அது தொடர்பில் விசாரணை
நடக்கின்றது. விசாரணை அறிக்கை வெளிவந்த பின்னரே மேலதிக தகவல்கள் தெரியவரும்.” என்றார்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்